புதுடெல்லி: கொரோனா உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை பல வகைகளில் பாதித்திருக்கிறது. அதில் ஒன்று தான் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி போட்டுக் கொள்வது. அனைவரும் கொரோனாவை தடுக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்வது கட்டாயம் என்ற நிலையில், இனிமேல் வெளிநாடு செல்பவர்கள் தடுப்பூசி சான்றிதழையும் கொண்டு செல்லவதும் அவசியமாகிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா இதுவரை உலகில் இதுவரை இல்லாதவகையில், வகை வகையாய் பரவுகிறது என்பதால் இந்த கட்டுப்பாடு உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.


எனவே, வெளிநாடு பயணிப்பவர்கள் தங்களது தடுப்பூசி சான்றிதழ்களை அவர்களின் பாஸ்போர்ட் எண்களுடன் இணைக்க உதவும் விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய அரசின் கோ-வின் போர்டல். 


Also Read | PAN Card டவுன்லோட் செய்ய சில நிமிடங்களே போதும்; வழிமுறை இதோ…


இந்த நடவடிக்கை வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும். 


இது தொடர்பாக ஆரோக்யா சேது செயலியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலமாக தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை இணைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் படிப்படியாக கூறப்பட்டுள்ளது.  



இது, கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தடுப்பூசி சான்றிதழ்களை பாஸ்போர்ட்டுடன் இணைப்பதற்கான எளிய வழிமுறை இதோ…  


1. http://cowin.gov.in இல் உள்நுழையவும்….


2. ‘Raise a Issue’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்


3. ‘passport ’ (பாஸ்போர்ட்) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்


4. கீழ்தோன்றும் தெரிவுகளில் இருந்து person என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்


5. பாஸ்போர்ட் எண்ணை உள்ளிடவும்


6, பிறகு Submit என்பதை கிளிக் செய்யவும்


தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண் சில நொடிகளில் இணைந்து புதிய சான்றிதழ் வந்துவிடும். இந்த சான்றிதழைக் காட்டி வெளிநாட்டுக்கு செல்வதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்யலாம்.


Also Read | SBI Alert: ஜூலை 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR