SBI Alert: ஜூலை 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்

SBI New Rule: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ஏடிஎம்கள் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தை மாற்றியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 27, 2021, 09:13 AM IST
  • ஜூலை 1 முதல் SBI-யின் பல விதிகள் மாறவுள்ளன.
  • SBI வங்கி கிளைகளிலிருந்து பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தை மாற்றியுள்ளது.
  • மூத்த குடிமக்களுக்கு காசோலை புத்தகங்களில் புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு
SBI Alert: ஜூலை 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் title=

புது டெல்லி: SBI ATM New Rule: நீங்கள் ஒரு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளராக இருந்தால், கவனம் செலுத்துங்கள். உண்மையில், எஸ்பிஐ வங்கி அதன் பல முக்கியமான விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. ஸ்டேட் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்த புதிய விதிகள் ஜூலை 1, 2021 முதல் பொருந்தும், அதன் பிறகு பணம் திரும்பப் பெறுதல் மற்றும் ATM இல் இருந்து காசோலை புத்தகத்தைப் (Cheque Book) பயன்படுத்துவது விலை உயர்ந்ததாக இருக்கூடும். 

சேவை கட்டணத்தில் மாற்றம்
ஜூலை 1, 2021 முதல், நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐயின் (State Bank of India) பல விதிகள் மாறப்போகின்றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ATM மற்றும் வங்கி சேவையின் விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் கீழ், இப்போது ATM மற்றும் வங்கி கிளையிலிருந்து பணம் எடுப்பதற்கான சேவை கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவல் SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், புதிய கட்டணங்கள் Chequebook, பணம் பரிமாற்றம் மற்றும் பிற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். 2021 ஜூலை 1 முதல் எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அனைத்து புதிய சேவை கட்டணங்களும் பொருந்தும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

ALSO READ | சென்னை SBI ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடியவர்களில் ஒருவர் கைது

BSBD கணக்கு என்றால் என்ன?
SBI BSBD கணக்கு பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்காகும் (Zero Balance Saving Account). இத்தகைய கணக்குகள் ஏழைக் குடும்பங்களுக்கானவை. வழக்கமான சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு அளிக்கப்படுவது போலவே வங்கி, பூஜ்ஜிய இருப்பு கணக்குகளுக்கும் அதே அளவிலான வட்டியை அளிக்கின்றது. 

SBI வங்கி ATM இல் இருந்து பணம் எடுக்கும் முறை 
SBI BSBD கணக்கு உள்ளவர்களுக்கு 4 முறை இலவசமாக பணம் எடுப்பதற்கான வசதி கிடைக்கிறது. வங்கிக் கிளைகளுக்கு அருகில் உள்ள ஏடிஎம்களில் (SBI ATM) செய்யப்படும் பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும். இலவச வரம்பு முடிந்துவிட்டால், வங்கி, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. வங்கிக் கிளை அல்லது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க வங்கி ரூ .15 மற்றும் ஜிஎஸ்டி-ஐ வசூலிக்கிறது.

SBI இல் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகளில் மாற்றம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பணத்தை எடுக்கும் வரம்பை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து, மற்ற வங்கிக் கிளைகளிலிருந்து, வித்ட்ராயல் படிவம் மூலம் ரூ .25,000 வரை பணம் எடுக்கலாம். மற்ற கிளைகளிலிருந்து காசோலை மூலம் இப்போது ரூ .1 லட்சம் வரை எடுக்க முடியும். மூன்றாம் தரப்பு (யாருக்கு காசோலை வழங்கப்படுகிறதோ) பணம் எடுக்கும் வரம்பு ரூ .50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ | Bank Holiday Alert: இந்த மாநிலங்களில் வங்கிகள் 4 நாட்களுக்கு மூடப்படும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News