PAN Card டவுன்லோட் செய்ய சில நிமிடங்களே போதும்; வழிமுறை இதோ…

பான் கார்டை பதிவிறக்குவது எப்படி? வீட்டில் இருந்தபடியே பான் அட்டையை சில நிமிடங்களில் எப்படி பதிவிறக்கம் செய்வது தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 26, 2021, 02:57 PM IST
  • பான் கார்டை பதிவிறக்குவது எப்படி?
  • வீட்டில் இருந்தபடியே பான் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்
  • சில நிமிடங்களிலேயே இ-பான் அட்டை நகலை பதிவிறக்கலாம்
PAN Card டவுன்லோட் செய்ய சில நிமிடங்களே போதும்; வழிமுறை இதோ…   title=

பான்- நிரந்தர கணக்கு எண் அதாவது பான் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். உங்கள் வருமானம், வருமான வரி விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால், பான் எண்ணை வைத்திருப்பது கட்டாயமாகும். பான் கார்டைப் பெற, முதலில் ஒருவர் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

ஆனால், இப்போது ஆன்லைனில் சுலபமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. உங்கள் பான் அட்டை சில நிமிடங்களில் கிடைக்கும். விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே e-PAN அட்டையைபதிவிறக்கம் செய்யலாம்.

நாட்டின் மிகப்பெரிய அமைப்பான மத்திய நேரடி வரி வாரியம் (Central Board of Direct Taxes (CBDT)) e-PAN வசதியைத் தொடங்கியது. நீங்கள் e-PANக்கு விண்ணப்பித்தால், சிபிடிடி உங்களுக்கு பான் கார்டின் நகலை PDF வடிவத்தில் மின்னஞ்சலில் அனுப்புகிறது. உங்கள் மின்னஞ்சல் ஐடியிலிருந்து பான் அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மேலும், பான் கார்ட் சேதமடைந்தால், நகல் அட்டை பெறும் வரை e-PAN அட்டையை பயன்படுத்தலாம். செய்யலாம்.

Also Read | ஒரு ஆதார் அட்டை மூலம் எத்தனை புதிய SIM வாங்கலாம் என்பது தெரியுமா..!

உடனடி பான் கார்டுக்கு (Instant PAN) விண்ணப்பிப்பது எப்படி?

வருமான வரித் துறையின் e-filing போர்ட்டலுக்குச் சென்று, “Instant PAN through Aadhaar” பிரிவில் இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள “Quick Links” என்பதைக் கிளிக் செய்யவும்.
அதையடுத்து தோன்றும் புதிய பக்கத்தில் “Get New PAN” என்பதைக் கிளிக் செய்யவும். புதிய பான் கார்டுக்கு உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டவுடன், உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசியில் OTP எண் வரும்.

அந்த OTP ஐ அங்கீகரிக்கவும். அதையடுத்து ஆதார் விவரங்களை அங்கீகரிக்கவும். பான் கார்டு பயன்பாட்டிற்கான மின்னஞ்சல் ஐடியை அங்கீகரிக்கும் தெரிவும் உண்டு.  

அந்த ஆதார் எண்ணின் e-KYC தரவு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) பகிரப்படும், அதன் பிறகு உங்களுக்கு உடனடி பான் கிடைக்கும். இந்த முழு செயல்முறைக்கும் அதிகபட்சம் 10 நிமிடங்கள் தான் ஆகும்.  

Also Read | EPFO Alert: PF அக்கவுண்ட் இருக்கா, அப்போ இதை உடனே செஞ்சிடுங்க

மின் பான் பதிவிறக்கம் செய்வது எப்படி?
https://www.myutiitsl.com/PAN_ONLINE/PANApp என்ற வலைத்தளத்திற்கு செல்லவும். விண்ணப்பதாரரின் நிலையை (applicant's status) உள்ளடக்கிய பெட்டியில் Individual என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

இதற்குப் பிறகு, தேவையானதைத் தேர்ந்தெடு என்ற விருப்பத்தில், physical PAN card மற்றும் e-PAN ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அதற்குக் கீழே கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்யவும். அதையடுத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘சமர்ப்பி’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Also Read | ஆதாரின் ‘இந்த’ சேவைகளை பெற இண்டெநெட் தேவையில்லை

படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு, அதிகாரிகள் உங்கள் தகவல்களை சரிபார்ப்பபர்கள். சிறிது நேரம் கழித்து மின்னஞ்சல் ஐடியில் PDF வடிவத்தில் e-PAN கிடைக்கும்.

புதிய பான் கார்டைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் எளிதானது, இலவசமானது. எந்த ஆவணத்தையும் போர்ட்டலில் பதிவேற்ற வேண்டிய அவசியமில்லை என்பது கூடுதல் சிறப்பு. இந்த வசதி இதற்கு முன்பு பான் அட்டை பெறாதவர்களுக்கானது.

பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் புதியவர்கள்,  ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும். e-PAN வசதி சிறார்களுக்கு இல்லை.

Also Read | ஆதாரின் ‘இந்த’ சேவைகளை பெற இண்டெநெட் தேவையில்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News