சுடு தண்ணீர் குடித்தால் உடல் எடையை குறைக்க முடியுமா? பதில் இதோ!
பலர் உடல் எடையை குறைக்க சுடு தண்ணீர் குடிப்பர். இதனால் உண்மையாகவே உடல் எடை குறையுமா? இதோ அதற்கான பதில்.
இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் எடையை குறைப்பது இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை குறைப்பது பலருக்கு மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும். இதற்காக பல டயட்டுகளையும், உடற்பயிற்சி முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டி இருக்கும். தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதில் இருந்து இரவில் கடைசியாக சாப்பிடும் உணவு வரை அனைத்தையும் என்னென்ன உணவுகள் சாப்பிடுகிறீர்கள் என்பதை நீங்கள் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
உடல் எடை குறைப்பதில் சுடுதண்ணீர் ஆற்றும் பங்கு..
உடலில் நீர்ச்சத்தினை வைத்துக்கொள்வது உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க சிறந்த வழியாகும். நீங்கள் உட்கொள்ளும் முன் தண்ணீரை சூடாக்குவது உண்மையில் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். நீங்கள் உடல் எடையை குறைப்பதாக இருந்தால், இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை தினமும் குடித்து பழக வேண்டும்.
வெதுவெதுப்பான தன்ணீர், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது மருத்துவர்கள் பலரால் அறிவுறுத்தப்படுகிறது. இது எடை குறைக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீர் உடல் கொழுப்பை மூலக்கூறுகளாக பிரிக்கிறது. செரிமான அமைப்பு கொழுப்பை எரிப்பதையும் எளிதாக்குகிறது. மேலும் உணவுக்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நமது கலோரி அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சாப்பிடுவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் நம் வயிறு நிரம்பும். இதனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.
மேலும் படிக்க | காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா?
சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
1.மலச்சிக்கல்:
வெதுவெதுப்பான நீர் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. வெதுவெதுப்பான மலத்தை மன்மையாக்க எளிதாக வெளியேற உதவுகிறது. ஆரோக்கியமான குடல் மற்றும் மேம்பட்ட குடல் இயக்கம் என்பது நம் உடலில் இருந்து நச்சுகளை முழுமையாக அகற்றுவதற்கும் வெந்நீர் உதவும்.
2.தொண்டை வலிக்கு உதவும்..
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் இருமல் மற்றும் சளியில் இருந்து தப்பிக்கலாம். இது மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும் மார்புச்சளியை குணப்படுத்தவும் உதவுகிறது. தொண்டை வலியை சரிசெய்ய வெதுவெதுப்பான தண்ணீரில், தேன் கலந்து குடிக்கலாம்.
3.வெதுவெதுப்பான நீர் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது:
நீங்கள் நொறுக்குத் தீனிகளை உண்பவராக இருந்தால், வெதுவெதுப்பான நீரை கையில் வைத்திருக்க எப்போதும் வேண்டும். உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற சுடு தண்ணீர் குடிப்பது உதவும். சுடுதண்ணீர் குடிப்பதால் நமக்கு வியர்க்கவும் செய்யும். இதன் மூலமாக நச்சுக்கள் வெளியேறும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
4.வெந்நீர் குடிப்பதால் சருமம் பொலிவாகும்..
மேற்கூறியது போலவே, சுடு தண்ணீர் குடித்தால் நன்றாக வியர்க்கும். இது, நமது சருமத்தில் இருக்கும் சிறுதுளைகளை திறக்கும். இதனால், முகப்பருக்கள் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க..
உடல் எடையை குறைக்க சுடுதண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு பின்னர் ஒரு எளிமையான காரணம் மட்டுமே உள்ளது. வெந்நீர் குடிக்கும் போது நமது உடல் சூடு அதிகரிக்கும். இது, நமடு மெட்டபாலிசத்தின் அளவை தூண்டி விடும். இதனால், உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பும் கரையலாம்.
மேலும் படிக்க | கண்பார்வை மேம்பட வேண்டுமா? ‘இந்த’ 2 உணவுகளை சாப்பிடுங்கள் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ