Good Eye Sight Tips: பலருக்கு பல காரணங்களினால் கண் பார்வை குறைபாடு ஏற்படும். அதற்காக சில உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
கண்பார்வை நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களது உணவுகளில் காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி, உங்கள் கண்பார்வையை சீர் செய்யும் இரண்டு உணவுகளை இங்கு பார்ப்போம்.
இளம் வயதினர் பலரும் கூட, கண்பார்வை குறைப்பாட்டினால் அவதிப்படுகின்றனர். அதிகம் செல்போன் பார்பது, சரியாக ஹெல்தியான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றால் கண்பார்வை பாதிக்கப்படும்.
கண் பார்வையை சீர் செய்ய, சில உணவுகள் நன்றாக உதவும். கண் பார்வை குறைபாடு வரக்கூடாது என்று நினைப்பவர்கள், கண்டிப்பாக சில காய்கறிகளை அவர்களின் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கண் பார்வை குறைப்பாட்டை தவிர்க்க பீட்ரூட் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ல வேண்டும். இவை இரண்டுமே கண் பார்வையை தாண்டி, உடல் நலத்திற்கும் உதவும்.
பீட்ரூட்டில் ஃபைபர் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. இவையன்றி ஃபோலேட் என்ற இன்னொரு சத்தும் உள்ளது. இதனால் உடலுக்கு வைட்டமின் பி சத்துக்கள் கிடைக்கும். இது, உடலில் நமக்கு கண்பார்வைக்கு உதவும் திசுக்களை வளர்க்க உதவும்.
பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள், கர்பிணிகளுக்கும் ஆற்றல் அளிக்க உதவும். பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இது உங்களது ஒட்டுமொத்த உடல் நலனையும் உயர்த்த உதவும்.
கீரை வகைகளில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் ஃபொலிக் அமிலங்கள் போன்ற சத்துக்கள் இருக்கிறது. வெயிட் லாஸ் செய்ய விரும்புபவர்கள் கூட இதை தங்களது டயட்டில் இதை சேர்த்துக்கொள்கின்றனர்.
கீரையில் உள்ள வைட்டமின் பி 21 மற்றும் ப்ரோட்டின் ஆகிய சத்துக்கள் நல்ல கண் பார்வை திறனுக்கு உதவும். மேலும், ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உதவும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால், இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.