இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை வேகமாக குறையுமா? பதில் இதுதான்!
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கும் பலர், இரவில் சாப்பிடாமல் இருப்பதுண்டு. இதனால் உடல் எடை குறையுமா?
குறைவான உணவை உட்கொள்வதால் உடல் எடை குறையும் என்பது நம்மிடையே உள்ள பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. இருப்பினும், உண்மை இதற்கு நேர்மாறானது. பல பெண்கள் உடலை ஃபிட் ஆக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக உணவை தவிர்க்கின்றனர். ஆனால், இதை செய்யவே கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவை தவிர்ப்பது உங்கள் உடல் நலனுக்கு பல்வேரு வகைகளில் கேடு விளைவிக்குமாம். இதனால் உடல் எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. உங்களது தினசரி டயட்டில் இரவு உணவும் பெரிய பங்கினை வகிக்கிறது. இதனை தவிர்ப்பதனால் உங்களது உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களும் நல்ல கொழுப்புகளும் கிடைக்காமல் போகலாம். இரவு உணவை தவிர்ப்பதனால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
இரவு உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்:
>இரவு உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தையும், உடலின் அனைத்து செயல்பாடுகளையும் சரியாகச் செய்யக்கூடிய ஆற்றலை வழங்குகிறது. ஆனால் நீங்கள் இரவு உணவைத் தவிர்க்கும்போது, நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வீர்கள். இது உங்கள் ஒரு நாளில் நீங்கள் செய்து கொள்ளும் வேலையை மேலும் சீர்குலைக்கும். இரவு உணவை தவிர்ப்பதால் உங்கள் தூக்கமும் பாதிக்கப்படும். இது ஒன்றரை நாட்களுக்கு உங்கள் எடையைக் குறைக்கும், ஆனால் மீதமுள்ள நாட்களில் அதுவே நிதர்சனமாக இருக்காது. இதனால் உங்கள் உடல் பலவீனமாகுமே அன்றி எடை குறையாது.
>உணவைத் தவிர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கலாம், இது எடை அதிகரிக்க வழிவகுக்கும் அல்லது எடையைக் குறைப்பதை கடினமாக மாற்றிவிடும். நீங்கள் மிகக் குறைந்த கலோரி உணவை உட்கொண்டால், உங்கள் உடல் பாதுகாப்பான முறையில் உங்கள் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கிறது. இதனால் நீங்கள் குறைவான கலோரிகளை எரிக்கிறீர்கள்.
மேலும் படிக்க | யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா? இந்த பச்சை இலையை சாப்பிடுங்கள்
>இரவு உணவைத் தவிர்ப்பதன் மூலம் உடல் எடை குறைகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது எடையை அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. எந்த உணவையும் தவிர்ப்பது மன அழுத்த அச்சுறுத்தலை எதிர்த்து உங்கள் உடலில் ஸ்டீராய்டு ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால், உங்கள் உடலில் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும்.
>உணவை தவிர்ப்பது அல்லது சாப்பிடாமல் வெகு நேரம் இருப்பது போன்ற பழக்கத்தால் உங்கள் உடல் உயிர்வாழும் முறைக்கு (Survival Mode) சென்று விடும். இதனால் உங்கள் உடலில் உள்ள செல்கள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தேடுமே தவிர, ஹெல்தியாக சாப்பிட வேண்டும் என்று தேடாது. துரித உணவுகள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் என எது கிடைத்தாலும் நீங்கள் சாப்பிட முனைவீர்கள். இதனால் ஹெல்தி அற்ற உணவு பழக்கத்தினை பின்பற்றுவீர்கள்.
இரவு உணவை தவிர்ப்பதை விட்டுவிட்டு, சில டயட் உணவுகளை சாப்பிட்டால் கண்டிப்பாக உடல் எடை குறைப்பிற்கு அது உதவும். பாசி பருப்பு, காய்கறி சேலட், வேக வைத்த டின்னர் உணவுகள் போன்றவை உங்களது உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும். மேலும், எப்போது சாப்பிட்டாலும் சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் எடை குறைய நிறைய வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | பளபளக்கும் சருமத்திற்கு தினமும் இந்த யோகாசனங்களை செய்யவும்
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ