யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா? இந்த பச்சை இலையை சாப்பிடுங்கள்

Benefits Of Betel Leaves: நாடு முழுவதும் ஏராளமான மக்களுக்கு வெற்றிலை போடும் பழக்கமிருக்கும். வெற்றிலையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்றாலும், யூரிக் அமிலம் குறைப்பதில் எப்படி செயலாற்றுகின்றன தெரியுமா?

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 4, 2023, 11:17 AM IST
  • வெற்றிலை ஒரு ஆயுர்வேத மூலிகையாக அறியப்படுகிறது.
  • வெற்றிலையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
  • வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா? இந்த பச்சை இலையை சாப்பிடுங்கள் title=

வெற்றிலையின் நன்மைகள்: இந்தியாவில், பலருக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருக்கும். ஏனெனில் இந்தியாவில் வெற்றிலை சாப்பிடுவது பல நூற்றாண்டு பழமையான பாரம்பரியம் ஆகும். நாடு முழுவதும் ஏராளமான மக்கள் வெற்றிலை சாப்பிட விரும்புகிறார்கள். இதுமட்டுமின்றி, நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனையை நீக்குகிறது ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.

வெற்றிலை (Betel Leaves Health Benefits) ஒரு ஆயுர்வேத மூலிகையாக அறியப்படுகிறது. டானின், புரொப்பேன், ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபீனைல் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் வெற்றிலையில் காணப்படுகின்றன, இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியும்கூட.. நமது உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள் ஏற்பட்டால், அந்த வலிகளை போக்க இந்த வெற்றிலையை பயன்படுத்தலாம்... இதை அளவோடு சாப்பிட்டுவந்தால் ஆண்மை குறைபாடும் நீங்கும். இந்த வெற்றிலையை வெறுமனே மென்று சாப்பிட்டாலே, வயாகராவுக்கு இணையான சக்தி கிடைக்குமாம்.

இந்நிலையில் வெற்றிலையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்றாலும், யூரிக் அமிலம் குறைப்பதில் எப்படி செயலாற்றுகின்றன தெரியுமா? வாருங்கள் வெற்றிலையின் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க | வெளியே குளுகுளுன்னு மழை பெய்யுதே.. சூடா இந்த 5 ஸ்நாக்ஸை சாப்பிடுங்கள்!

வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. யூரிக் அமிலம்- உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. ஆனால் வெற்றிலை உடலில் அதிகரித்து வரும் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியாது.

2. செரிமானம்- செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வெற்றிலையை உட்கொள்ளலாம். தொடர்ந்து வெற்றிலையை மென்று சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

3. ஈறுகள்- வெற்றிலையை உட்கொள்வது ஈறுகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வெற்றிலையை தொடர்ந்து மென்று சாப்பிடுவதன் மூலம், ஈறுகளில் வீக்கம் அல்லது கட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

4. குளிர்காலம்- வெற்றிலையின் தன்மை வெப்பமானது. குளிர்காலத்தில் வெற்றிலை சாப்பிடுவது நல்லது என்பதற்கான காரணம் இதுவாக இருக்கலாம். வெற்றிலையை சாப்பிட்டால் சளி பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

5. உடல் எடை- நார்ச்சத்து அதிகமுள்ள வெற்றிலையில், மிளகிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள், பெப்பரின் போன்றவை சேர்வதால், உடலிலுள்ள கொழுப்பை உடைக்க எளிதாக உதவுகின்றன. மிளகில் உள்ள பெப்பரைன் செரிமானத்திற்கும் சிறப்பாக உதவுகிறது. ஆக, வெற்றிலை + மிளகு இவை இரண்டும் சேர்ந்து, வாயு தொந்தரவு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அசிடிட்டிகள், நச்சுக்கள், கழிவுகளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது. பெண்களுக்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேரும் மிகுதியான கொழுப்புகளும் கரைய துவங்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொங்கும் தொப்பையை ஓட ஓட விரட்டலாம்.. 'இதை' மட்டும் சாப்பிட்டால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News