அதிகமாகும் உடல் எடையை குறைக்க இந்த டயட் ஃபாலோ பண்ணுங்க: 7 நாளில் வித்தியாசம் தெரியும்

Diet for Weight Loss: அனைவரும் தங்களது எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான டயட்டை பின்பற்றி ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலே உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 20, 2022, 02:20 PM IST
  • அனைவரும் தங்களது எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
  • எடை குறைக்க என்ன மாதிரியான டயட்டை கடைபிடிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
  • உடல் எடையை குறைக்க இந்த டயட்டை பின்பற்றவும்.
அதிகமாகும் உடல் எடையை குறைக்க இந்த டயட் ஃபாலோ பண்ணுங்க: 7 நாளில் வித்தியாசம் தெரியும் title=

உடல் எடையை குறைக்கும் உணவுகள்: உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் உடல் எடை அதிகரிப்பது மக்களுக்கு பொதுவான பிரச்சனையாகி வருகிறது. அதிகரிக்கும் எடை சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களை கொண்டு வருகிறது. உடல் பருமனால் சிரமப்படுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். உங்களால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாவிட்டால், சில எளிய இயற்கையான வழிகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

அனைவரும் தங்களது எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.ஆரோக்கியமான டயட்டை பின்பற்றி ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலே உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? எடை குறைக்க என்ன மாதிரியான டயட்டை கடைபிடிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

உடல் எடையை குறைக்க இந்த டயட்டை பின்பற்றவும்

காலை உணவு

இட்லி / தோசை: 

மக்கள் பெரும்பாலும் காலை உணவில் மைதா, கடலை மாவாலான பண்டங்களை சாப்பிடுகிறார்கள். அதற்கு பதிலாக இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றை சாப்பிடலாம். இவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன. இப்படிப்பட்ட காலை உணவுடன் நாளை துவக்குவது நல்லது. 

மேலும் படிக்க | முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!! 

நம் முன்னோர்கள் இதைத்தான் பின்பற்றி வந்தார்கள். சிலர் காலையில் வெறும் பழங்களை சாப்பிடுகிறார்கள். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம் பசிக்க, பின், எளிதில் ஜீரணம் ஆகாத எதையாவது சாப்பிட்டு விடுகிறார்கள். இதனால் பாதிப்பு ஏற்படும். பழங்களை சாப்பிடுவது நல்லதுதான். ஆனால், அதனால் நிறைவுபெறாத உணர்வு ஏற்படும் என நினைப்பவர்கள் இட்லி, தோசை போன்ற நமது பாரம்பரிய காலை உணவுகளை உட்கொள்ளலாம்.

முட்டை சாட்:
முட்டை சாட்டில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. நீங்கள் அதை காலை உணவில் உட்கொள்ளலாம். இது உங்கள் எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதை சாப்பிடுவதன் மூலம், உங்கள் நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும், விரைவில் பசியை உணர மாட்டீர்கள். 

மதிய உணவு:
கடலை மாவு, ஓமம் பராத்தா:

உடல் எடையை குறைக்க, கடலை மாவு மற்றும் ஓமம் கொண்டு செய்யப்பட்ட பராந்தாவை மதிய உணவில் சாப்பிடலாம். இதற்கு, ஒரு கிண்ணம் கடலை மாவு, அரை கிண்ணம் கோதுமை மாவு, ஒரு சிட்டிகை உப்பு, அரை தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் கலந்து மாவை பிசையவும். இப்போது இந்த மாவை சிறிய உருண்டைகளாக செய்து தேய்த்து பராத்தாக்களாக செய்யவும். இதை அனைத்து காய்கறிகளுடனும் சாப்பிடலாம்.

இரவு உணவு
மல்டிகிரைன் பிரெட் சாண்ட்விச்:

மல்டிகிரைன் பிரெட்டின் 2 துண்டுகளை ரோஸ்ட் செய்து கொள்ளவும். இப்போது அவகேடோ பழத்தின் கூழை எடுத்து, இந்த கூழில் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். இப்போது ஒரு பிரெட் துண்டில் தயிர் மற்றும் மற்றொரு துண்டில் அவகேடோ கூழ் தடவவும். மறுபுறம், துருவிய பனீர், கேரட் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். இப்போது தோசைக்கல்லில் இதை ஒரு நிமிடம் கிரில் செய்யவும். இதை இரவு உணவில் சாப்பிட்டு உங்கள் எடையைக் குறைக்கலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை ஒய்யாரமா குறைக்கணுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க போதும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News