அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது உணவுக்கு மட்டுமல்ல, எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும் என்பது அடிக்கடி நிரூபணமாகிறது. அதிலும் குறிப்பாக அன்புக்கும், அக்கறைக்குமே பொருந்தும் இந்த முதுமொழி என்றால் ஆச்சரியமாக உள்ளதா? உண்மைதான்! அதிக அன்பு மன அழுத்தத்தை கொடுக்கிறதாம், அது உயிருக்கே ஆபத்தாகும் அளவு அழுத்தத்தைக் கொடுக்கிறதாம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கால மாறுதல்களில், நடக்கும் விஷயங்கள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு வாழ்க்கை முறைகள் மாறிவிட்டது. பலர் வீடுகளில் இருந்துக் கொண்டே அலுவலகப் பணியாற்றி வருகின்றனர். இதனால் வீடுகளில் தங்கும் நேரம் அதிகரித்துவிட்டது. இங்கு தான் பிரச்சனைத் தொடங்குகிறது.
பிரச்சனை என்பது மனிதர்களுக்கு மட்டும் தான் வருமா என்ன? விலங்குகளுக்கு வராதா?


அதிலும் குறிப்பாக தன்னிச்சையாக வாழும் பிராணிகளைவிட, செல்லமாய் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் தங்கள் உரிமையாளர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதால் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய அளவுக்கு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


READ ALSO | பாலியல் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பதில் என்ன?


அதிலும் குறிப்பாக, பூனைகளின் தினசரி வழக்கத்தை அதன் உரிமையாளர்கள் சேதப்படுத்துகிறார்கள், அதாவது, தங்கள் அன்புக்குரிய செல்லப்பிராணியுடன் அதிக நேரம் செலவழித்து, அதன்மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள்.


கடந்த 18 மாதங்களில் ஆண் பூனைகளுக்கு, அதிகளவில் சிறுநீர்ப்பையில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், பெண் பூனைகளுக்கு கட்டி ஏற்படுவதாகவும் கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஆபத்தான நிலைமை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உரிமையாளர்கள் தங்கள் பூனைகளுக்கு மறைவான இடங்களை உருவாக்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்களின் கூறுகின்றனர்.


பூனையின் உணவு, தண்ணீர் மற்றும் தட்டுகளை அதிக சப்தம் இல்லாத இடங்களில் வைக்க அவற்றின் உரிமையாளர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


ALSO READ | பிகினியும், முகக்கவசமும்… இது நவீன பாணி உடையலங்காரம்!


பூனைகள் பாதுகாப்பிற்காக பலர் போராடி வருகின்றனர், இது பூனைகளின் நலனைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பூனைகளை மீட்டு மறு குடியேற்றம் செய்யும் தொண்டு நிறுவனம் Cats Protection.


ஸ்விண்டனில் உள்ள வெட்ஸ் கிளினிக்கில் (Vet's Klinic) பணிபுரியும் கால்நடை செவிலியர் டெபி ஜேம்ஸ், பூனைகள் பழக்கத்தின் உயிரினங்கள் என்றும் அவற்றின் வழக்கத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் அவற்றை தொந்தரவு செய்யும் என்று கூறுகிறார்.


நாய்கள் தங்கள் உரிமையாளர்களின் கூடுதல் கவனத்தை அனுபவிக்கும் போது, மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும், கொரோனாவினால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது நாய்கள் பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்பட்டன.


ALSO READ | 40 ஆண்டுகளாக தூங்காத வினோத பெண், மருத்துவர்களே வியக்கும் அதிசயம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR