Take it sportive! பாலியல் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பதில் என்ன?

விளையாட்டு வீரர்கள், தங்கள் பயிற்சியையும், பாலியல் வாழ்க்கையையும் எப்படி சமாளிக்கிறார்கள்? இந்த கேள்விக்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பதில் என்ன தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 5, 2021, 06:58 PM IST
  • விளையாட்டு வீரர்கள், பயிற்சியையும், பாலியல் வாழ்க்கையையும் எப்படி சமாளிக்கிறார்கள்?
  • இந்த கேள்விக்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பதில் என்ன தெரியுமா?
  • இப்படிப்பட்ட சங்கடமான கேள்விகளை கேட்பது நியாயமா?
Take it sportive!  பாலியல் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பதில் என்ன? title=

சாதனை படைத்தவர்கள் பிரபலமாகின்றனர். ஆனால், தங்களது பிரபலத்திற்காக அவர்கள் கொடுக்கும் விலையும் அதிகம் தான். இதற்கான அண்மை உதாரணம் இந்திய ஒலிம்பிக் கதாநாயகன் நீரஜ் சோப்ராவிற்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலை.

தனது விளையாட்டுத் திறமையால் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தாலும், அவர் பிரபலமானதற்கு பிறகு பாராட்டு வார்த்தைகளை மட்டுமல்ல, சங்கடமான கேள்விகளையும் எதிர்கொள்கிறார். 

கலை வரலாற்றாசிரியர் மற்றும் கியூரேட்டருமான (art historian and curator) ராஜீவ் சேத்தியின் கேள்வி தங்கப்பதக்கம் வென்ற ஒலிம்பிக் ஹீரோவின் வாயை அடைக்கச் செய்துவிட்டது.  

ALSO READ | இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு குவியும் பரிசுகள், பாராட்டுகள்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பொறுத்தவரை, அவரது டோக்கியோ சாதனைகளுக்குப் பிறகு வாழ்க்கை 360 டிகிரி திருப்பத்தை எடுத்துவிட்டது. பிரபலங்களுக்கு பாராட்டுக்களும் வெகுமதிகளும் மட்டுகல்ல, சங்கடமான கேள்விகளையும் எதிர்கொள்ளும் சங்கடங்களும் எழுகின்றன. இதற்கு அண்மை உதாரணம் நீரஜ் சோப்ராவின் இந்த வீடியோ

தங்கம் வென்று நாயகனாகிவிட்டதால், அவரின் ஒவ்வொரு செயலும் கவனத்தை ஈர்க்கும் மையமாக மாறிவிட்டது. அவரது அந்தரங்கம் தொடர்பான கேள்விகளும் பொதுவெளியில் முன்னெழும் என்பதை அவர் இதுவரை எதிர்பார்த்திருக்கமாட்டார்.  

அன்மையில் ஊடக நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட நீரஜ் சோப்ராவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார் வரலாற்றாசிரியரும் கியூரேட்டருமான ராஜீவ் சேத்தி. விளையாட்டு வீரராக உங்கள் பாலியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று ராஜீவ் சேத்தி கேள்வியை கேட்டுவிட்டார்.
அது விளையாட்டு வீரரான நீரஜ் சோப்ராவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி நெளிய வைத்துவிட்டது.  

"நீங்கள் மிகவும் அழகான இளைஞர்" என்று ராஜீவ் சேத்தி தனது கேள்வியைத் தொடங்கினார். கோடிக்கணக்கான இந்தியர்கள் சோப்ராவிடம் ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் கேட்கத் தயங்கும் கேள்வி அது என்று சொன்ன ராஜீவ், விளையாட்டுப் பயிற்சியுடன் நீரஜ் தனது பாலியல் வாழ்க்கை (sex life) எவ்வாறு சமன்படுத்துகிறார் என்று கேட்டார்!

சோப்ரா கேள்வியைத் தவிர்க்க முயன்றார். “மன்னிக்கவும், ஐயா. நான் மன்னிப்பு கேட்பதில் இருந்தே எனது பதிலை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்று நயமாக சோப்ரா சொன்னாலும், சேத்தி கேள்வியை விட்டு விலகவில்லை! தடகள வீரர்கள் தங்கள் பயிற்சியை தங்கள் பாலியல் வாழ்க்கையுடன் எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வியை மீண்டும் கேட்டார். இந்த பேட்டியை ட்விட்டர் பயனர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டார். அது வைரலாகிறது. 

ட்விட்டரில் பகிரப்பட்ட இடுகைக்கு பல லைக்குகள் மற்றும் கருத்துகள் இருந்தன. இந்த கேள்வியை ஏன் விராட் கோலியிடம் கேட்கவில்லை என்று ஒருவர் ராஜீவ் சேத்தியிடம் கேள்வி எழுப்பினால், மற்றொருவரோ,  சேத்தியை "பண்பு இல்லாதவர்" என்று கடுமையாக சாடினார். இதுபோல், இந்த வைரல் வீடியோவுக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சோப்ரா கருத்து தெரிவிக்க தயங்குவதை பார்த்தாவது, பேட்டி எடுக்கும் சேத்தி அவரை விட்டிருக்கவேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் அவரிடம் இந்த கேள்வியை கேட்டு சங்கடப்படுத்திவிட்டார், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கருத்திட்டுள்ளனர்.

ALSO READ | நீரஜ் சோப்ராவின் நினைவாக நாணயத்தை வெளியிடலாமே?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News