முக்கியமான WhatsApp மெஸ்சேஜ் டிலீட் ஆனதா.. கவலையில்லை..WhatsRemoved+ இருக்கு!!
நீங்கள் வாட்ஸ்அப்பில் வந்த முக்கியமான செய்தியை தவறுதலாக நீக்கி விட்டால், கவலைப்பட வேண்டாம். அதனை மீண்டும் படிக்க வழி இருக்கு.
வாட்ஸ்அப், தகவல்கள். வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாகும்.
இன்று, பெரும்பாலான மக்கள் சேட் செய்ய வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். இது அனைவருக்கும் தகவல்களை எளிதான வழியாக மாறிவிட்டது.
WhatsApp மூலம் திருமண அழைப்பிதழ் கூட அனுப்படுகின்றன. ஒரே நேரத்தில் அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்புவது எளிது.
WhatsApp தகவல் அளிப்பதை சுவாரஸ்யமாகவும் எளிதாகவும் ஆக்கியுள்ளது. இருப்பினும். இப்போது வரை நீக்கப்பட்ட செய்தியை மீண்டும் படிக்க வகை செய்யும் அம்சம் எதுவும் WhatsApp-ல் இல்லை. ஆனால், இப்போது நீக்கப்பட்ட செய்தியை மீண்டும் படிக்கக்கூடிய வழியையும் இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பு செயலியை பதிவிறக்க வேண்டும், இதன் உதவியுடன் நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து நீக்கப்பட்ட செய்திகளை எளிதாக படிக்க முடியும். வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு இதுபோன்ற எந்த அதிகாரப்பூர்வ அம்சத்தையும் வழங்கவில்லை. ஆனால் இந்த செயலியின் நீக்கப்பட்ட செய்திகளை மீண்டும் படிக்கலாம். Google Play Store இலிருந்து இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
முதலில், உங்கள் தொலைபேசியில் உள்ள Google Play Store இலிருந்து WhatsRemoved + செயலியை பதிவிறக்க வேண்டும். செயலி நிறுவப்பட்ட பின், அதன் செட்டிங்குகளை அமைத்து முடித்து தேவையான அனுமதிகளை வழங்கவும். இதற்குப் பிறகு, மீண்டும் செயலிக்கு சென்று இதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும், யாருடைய அறிவிப்பை நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்கள், அதாவது, நீங்கள் வாட்ஸ்அப்பின் நோடிஃபிகேஷனை சேமிக்க விரும்பினால், வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுத்து, நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்யவும். செயலியில் ஒரு புதிய திரை தோன்றும், அதில் YES என்பதைக் கிளிக் செய்து ‘சேவ் பைல்’ என்பதை தேர்ந்தெடுங்கள்.
இதையெல்லாம் செய்த பிறகு, நீங்கள் செயலியை பயன்படுத்தலாம், அதன் பிறகு வாட்ஸ்அப்பின் நீக்கப்பட்ட அனைத்து செய்திகளும் இந்த செயலியில் தெரியும். ஆனால், இந்த மூன்றாம் தரப்பு செயலி வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ அம்சம் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால், அதன் பாதுகாப்பான செயலி தானா என்பது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ| WhatsApp விரைவில் கொண்டு வருகிறது Multi Device Support.. அதன் சிறப்பு அம்சம் என்ன..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR