Latest Lifestyle News Tamil : வாங்கிங் செல்வது, அதாவது நடப்பு என்பது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது என தெரிந்தாலும் அதனைக் கூட சிலரும் தினசரி செய்வதில்லை. அந்தளவுக்கு சோம்பேறித்தனம் ஆட்கொண்டிருக்கும் நிலையில், உடல் எடையை குறைக்க தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவுமுறைகளை எல்லாம் பின்பற்றுகிறார்கள். அவர்களில் இருந்து நீங்கள் தனித்து நடைபயிற்சி வழியாகவே நீங்கள் உடல் எடையை குறைக்கிறீர்கள் என்றால் தினமும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாகவே நடப்பது என்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும், தொப்பை கொழுப்பை எரிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் தினசரி வழக்கத்தில் 30 நிமிட நடைப்பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். எனவே, எப்படி நடக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். 


உடல் எடையை குறைக்க வாக்கிங்


அதிக முயற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்பினால், சிறந்த வழி வாக்கிங் தான். உடலுக்கு தேவையில்லாத உணவுகளை ஒதுக்குதல், கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சியை விரும்புபவர்கள் வாங்கிங் செய்யலாம். இதன் மூலம் உடலில் அதிகரிக்கும் கொழுப்பை குறைக்கலாம். மன அழுத்தம் இன்றைய வாழ்க்கை முறையில் சிறந்த மற்றும் எளிமையான பயிற்சி வாக்கிங். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதுடன் அன்றைய நாளின் எந்த நேரத்திலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளாலம். இதயம், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை எதிர்த்து போராட வாக்கிங் சிறந்த பயிற்சி.


வாக்கிங் குறித்து ஆய்வு சொல்வது என்ன?


தினசரி வாக்கிங் செல்பவர்களுக்கு எடை சீராக குறைவதுடன் டைப் 2 நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் 60 விழுக்காடு மாரடைப்பு அபாயத்தையும் நடைப்பயிற்சி குறைக்கிறது. இதில் சிறப்பானது என்னவென்றால், நடைபயிற்சி ஆரோக்கியமான மனம்-உடல் சமநிலையை பராமரிக்கிறது. நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாகவும் நேர்மறையாகவும் இருப்பதை காலையில் நடைபயிற்சி செய்வது உறுதி செய்கிறது என அண்மையில் வெளியான ஆய்வு சொல்கிறது.


ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?


ஒருவர் ஒருநாளைக்கு குறைந்தது 10 ஆயிரம் படிகளாவது நடக்க வேண்டும். நடைப்பயிற்சிக்கு இடையே ஓய்வு எடுப்பதும் அவசியம். மற்ற உடற்பயிற்சிகளுக்கு இருப்பதுபோல் நடைபயிற்சிக்கான சூத்திரம் எதுவும் இல்லை என்றாலும், அவரவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு நடக்கும் தூரத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நடைபயிற்சியை தொடங்கும்போது, முதலில் சிறியதாக தொடங்குங்கள், பின்னர் அதனை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | கர்ப்பிணிகள் கவனத்திற்கு... கருவை பாதிக்கும் ‘இந்த’ உணவுகளுக்கு நோ சொல்லுங்க!


நடைப்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் என்ன?


தொப்பை கொழுப்பை குறைத்தல்


வயிறு மற்றும் அடிவயிற்று பகுதியில் இருக்கும் தொப்பை  கொழுப்பை குறைக்க நடைபயிற்சியும் சிறந்த உடல் பயிற்சியே. விறுவிறுப்பாக நீங்கள் நடந்து சென்றால் அந்த பயிற்சி உங்களின் தொப்பை கொழுப்பைக் கரைத்துவிடும். இதனை ஓரிரு நாட்கள் செய்துவிட்டு ரிசல்டை எதிர்பார்க்கக்கூடாது. தொடர்ச்சியாக நீங்கள் இந்த பயிற்சியை செய்து கொண்டே இருக்க வேண்டும். 


மன அழுத்தத்தைக் குறைக்கும்


ஒருவரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்து நடைப்பயிற்சி என்றே சொல்லலாம். தினசரி நீங்கள் நடைபயிற்சி செய்யும்போது உங்களுக்குள் இருக்கும் அழுத்தங்கள் எல்லாம் விடுபட்டு நீங்கள் சுதந்திரமாக இருப்பதைப் போல உணர்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு தேவையான விஷயங்களில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவீர்கள். இது உங்களின் வாழ்க்கை முறையை மாற்றும் அச்சாணியாக நடைப்பயிற்சி இருக்கும்.


ரத்த சர்க்கரை சமநிலை


உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்ளவே கூடாது. ஒருவேளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அதற்கேற்ப தினமும் உங்களின் நடைப்பயிற்சியை அதிகப்படுத்துவதன் மூலம் சர்க்கரையால் உருவான கலோரிகள் எல்லாம் எரித்துவிட முடியும். இதன் மூலம் ரத்தத்ததில் சர்க்கரை அளவை சமநிலையில் பேண முடியும்.


தினமும் எவ்வளவு நேரம் நடக்கலாம்


நாள் ஒன்றுக்கு நீங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்யலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அல்லது பிரித்து இந்த பயிற்சியை செய்யலாம். ஆனால், நடைப்பயிற்சியை மட்டும் கைவிட்டுவிடக்கூடாது. தினசரி பயிற்சி உங்கள் உடல் ஆரோக்கியத்தை நிச்சயம் மேம்படுத்தும். 


மேலும் படிக்க | கர்ப்பிணிகளே... ‘இந்த’ பழங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்க..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ