பித்தப்பை போன்ற செரிமான கோளாறுகளின் அபாயத்தை குறைக்க காபி பருகவும்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபி பருகுவது பித்தப்பை நோய் மற்றும் கணைய அழற்சி உள்ளிட்ட சில செரிமான கோளாறுகளின் அபாயத்தை குறைக்க உதவும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. எடையை குறைத்து, செரிமான நோய்களிலிருந்து விடுபட வேண்டுமா? கருப்பு உப்பு எடுத்துகொள்ளுங்கள் போதும்


காபி பற்றிய அறிவியல் தகவல் நிறுவனமான ஐ.எஸ்.ஐ.சி மேற்கொண்ட ஆய்வில், காபி குடித்தால், செரிமான செயல்பாட்டில் ஏற்படக்கூடிய பிற நல்ல விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது, இதில் குடல் மைக்ரோஃப்ளோராவிற்கு உதவுவது மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்.


மலச்சிக்கல் போன்ற பொதுவான செரிமான சிக்கல்களுக்கு எதிரான நன்மைகளையும், நாள்பட்ட கல்லீரல் நோய்கள் போன்ற தீவிர நிலைமையின் அபாயத்தைக் குறைப்பதையும் இந்த ஆய்வுகளின் தரவு சுட்டிக்காட்டுகிறது ”என்று இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும், எழுத்தாளருமான கார்லோ லா வெச்சியா கூறியிருக்கிறார்.


பித்தப்பை கல் என்பது ஒரு பொதுவான செரிமான கோளாறு ஆகும், இது பித்தப்பை அல்லது பித்த நாளத்தில் பித்தம் சேருவதால் ஏற்படுகிறது, இது வயது வந்தோருக்கு 10 முதல் 15 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


எந்த காபி யை குடிப்பது பித்தப்பை நோயிலிருந்து பாதுகாக்கும் என்பதற்கான வழிமுறை இன்னும் அறியப்படவில்லை என்றாலும், தினசரி காபி அதிகம் பருகுவதால் தொற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவது கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


காபியில் இருக்கும் காஃபின் இதில் ஒரு பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது, ஏனெனில் அதே விளைவு டிகாஃபீனேட்டட் காபி காபியில் காணப்படவில்லை. நுகர்வோர் மத்தியில் உள்ள பொதுவான கேள்வி மற்றும் ஆராய்ச்சிக்கான கவனம் செலுத்தும் பகுதி என்னவென்றால் காபி நெஞ்செரிச்சல் அல்லது இரைப்பை-ஓசோஃபேஜியல் ரிஃப்ளக்ஸ் நோயுடன் தொடர்புடையதா என்பதுதான்.


ஒரு சில ஆய்வுகள் காபி குடிப்பதற்கும் GORD க்கும் இடையிலான ஒரு தொடர்பை பற்றி பரிந்துரைத்திருந்தாலும், பெரும்பாலான ஆய்வுகள்


காபி பருகுவது இந்த நிலைமைகளின் முக்கிய தூண்டுதல் அல்ல என்று கூறுகின்றன. உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சியின் வளர்ந்து வரும் பகுதியும், அதாவது குடல் மைக்ரோஃப்ளோராவில் காபியின் விளைவு காணப்படுவது குறித்தும் இந்த அறிக்கை மதிப்பாய்வு செய்தது


சமீபத்திய ஆய்வுகள் நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவின் பிஃபிடோபாக்டீரியம் எஸ்பிபி, காபி குடித்த பிறகு அதிகரிக்கும் என்று கூறுகின்றன.


காபியில் காணப்படும் நார்ச்சத்து மற்றும் பாலிபினால்கள், மைக்ரோஃப்ளோராவின் எண்ணிக்கைகள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மேலும் சில ஆராய்ச்சி முடிவுகள் காபி பருகுவது இரைப்பை அமிலம், பித்தம் மற்றும் கணைய சுரப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்தைத் தூண்டும் என்று கருதப்படுகிறது.


காபி என்பது பரவலாக ஆராய்ச்சி செய்யப்பட்ட உணவின் அங்கமாக உள்ளது. மேலும் செரிமானத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்வது வளர்ந்து வரக்கூடிய ஆராய்ச்சியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


- மொழியாக்கம்: அருள்ஜோதி அழகர்சாமி.