Skin Care Beauty Tips, Donkey Milk: திரைப்படங்களில், விளம்பரங்களில் நடிகர்களை காண்பது போலவே தமக்கும் பளீரென கண்ணாடியை போன்ற சருமம் வேண்டும் என பலரும் நினைப்பார்கள். அதற்காக வீட்டிலேயே பல்வேறு டிப்ஸ்களை பின்பற்றி சமருத்திற்கு தினந்தினம் ஊட்டம் அளிப்பதாக கூறுவார்கள். செய்திதாள் தொடங்கி தற்போது யூ-ட்யூப் வரை சரும ஆரோக்கியத்தை முன்வைத்து மட்டும் பல்வேறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் சில டிப்ஸ்கள் பயனளிக்கலாம், பல டிப்ஸ்கள் கைக்கொடுக்காமலும் போகலாம். ஆனால் தொடர்ந்து பலரும் இதனை செய்வதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், சமீபத்தில் சரும ஆரோக்கியத்திற்கு கழுதைப் பால் சிறந்த பலன்களை தருவதாக தகவல்கள் வெளியாகி, இணையத்தில் வைரலாகின. பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூட பளிச்சென்ற தெளிவான சருமத்திற்கு கழுதைப் பாலை தினமும் குடிக்கலாம் என சொல்லியிருக்கிறார். இதுதான் கழுதை பால் திடீரென அதிக கவனம் பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளது.


பாபா ராம்தேவ் கழுதைப் பால் வீடியோ


கழுதைப் பால் குறித்து பாபா ராம்தேவ் ஒரு வீடியோவில் பேசி உள்ளார். அந்த வீடியோவில் பாபா ராம்தேவ் கழுதையிடம் இருந்து பாலை கறந்து, அதை அவரே அருந்துவதை பார்க்க முடிந்தது. அவர் அந்த வீடியோவில்,"நான் எனது வாழ்க்கையில் கழுதைப் பாலை இப்போதுதான் முதன்முதலாக குடிக்கிறேன். பசும்பால், ஆட்டுப்பால், செம்மறி ஆட்டுப்பால், ஒட்டகப்பால் ஆகியவற்றை முன்பு அருந்தியிருக்கிறேன். 



மேலும் படிக்க | சருமம் பொலிவாக, பொடுகை விரட்ட..கிச்சன் வேஸ்டை ‘இப்படி’ யூஸ் பண்ணுங்க!


அந்த வகையில், கழுதைப் பால் உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் சிறப்பான ஒன்றாக உள்ளது. மற்ற பால்களை ஒப்பிடும்போது கழுதைப் பால் ருசியாக இருக்கிறது. மேலும், எகிப்திய நாட்டை ஆண்ட மகாராணி கிளியோபட்ராவே அந்த காலத்தில் தனது சரும அழகுக்காக கழுதைப் பாலில்தான் குளித்தார்" எனவும் கூறினார். பசும்பால் அலர்ஜி இருப்பவர்கள் இதனை தயங்காமல் அருந்தலாம் என்றும் அவர் கூறினார்.


கழுதைப் பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகள்


பசும்பாலுக்கும், கழுதைப் பாலுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் விலைதான். பசும்பாலை நீங்கள் லிட்டர் ரூ.70க்குள் வாங்கலாம். ஆனால் கழுதைப் பால் லிட்டர் ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இது அதிக விலைக்கு விற்பனையாவதற்கு முக்கிய காரணம், குறைவாகவே இது கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், இதை அருந்துவதற்கு சமூக ரீதியான தடைகளும், கலாச்சார நம்பிக்கைகளும் இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே கழுதைப்பாலில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம். 


கழுதைப் பாலில் லாக்டோஃபெரின் என்ற மூலப்பொருள் அதிகமாகவே உள்ளது. இது ஆக்ஸிஜனேற்றியாகும். சரும ஆரோக்கியம் இதனால் மேம்படும். குறிப்பாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்க உதவும். மேலும் இதில் லாக்டிக் அமிலம், வைட்டமின் ஈ ஆகியவை அதிகம் உள்ளது. இது சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. உங்களின் சருமத்தில் வயதான தோற்றம் தெரியவே தெரியாது. எனவே, தினமும் காலையில் கழுதைப் பாலை பருகலாம். வைட்டமின் A, D, E ஆகியவை கழுதைப் பாலில் அதிகம் இருப்பதால் நேரடியாகவே முகத்திற்கு பயன்படுத்தலாம். அதாவது பச்சையாகவே கழுதை பாலை பயன்படுத்தி சருமத்தில் தடவலாம் என்கின்றனர். 


(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் சிலரின் தனிப்பட்ட கருத்து மற்றும் பொதுவான தகவல்கள் ஆகும். இதனை பயன்படுத்தும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை வாசகர்கள் மறக்காதீர்கள். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | பெண்களே! அரிசி கஞ்சியில் மறைந்திருக்கும் அழகு ரகசியம்..! முகம் பொலிவாக இதை செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ