Gujarat Donkey Milk Business: பசும்பால், எருமைப்பால் ஆகியவை இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இவை இந்திய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனலாம். இதன் முக்கிய காரணம், இந்தியாவில் பல தரப்பு மக்களுக்கு பசு வழிபாட்டுக்கு உரியாதாக இருப்பதும் ஒன்று என்றாலும் அதுசார்ந்த ஆரோக்கிய நன்மைகளையும் நாம் மறுக்க இயலாது.
ஆனால், தற்போது இவற்றைவிட கழுதை பால் என்பது விற்பனையில் கொடிக்கட்டி பறந்துவருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. அதாவது, இவற்றை விட சுமார் 70 மடங்கு அதிகமான விலையில் கழுதைப் பால் குஜராத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆம், குஜராத்தில் கொடிக்கட்டி பறக்கும் ஒருவரின் கழுதைப்பால் வியாபாரம் குறித்து இதில் காணலாம்.
மாதம் ரூ. 3 லட்சம் வரை வருமானம்
குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தீரன் சோலங்கி என்பவர் தனது பண்ணையில் மொத்தம் 42 கழுதைகளை வைத்துள்ளார். அவர் தென் மாநிலங்களில் பல வாடிக்கையாளர்களுக்கு கழுதைப் பாலை விநியோகிப்பதன் மூலம் ரூ. 2-3 லட்சம் வரை மாதம் வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..
இதுகுறித்து சோலங்கி கூறுகையில்,"ஆரம்பத்தில் நான் அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன். பின்னர் எனக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்தது. ஆனால் அதில் கிடைத்த வருமானம் என்பது எனது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. அப்போது தென்னிந்தியாவில் நடைபெறும் கழுதை வளர்ப்பு குறித்து எனக்கு தெரியவந்தது. இதுசார்ந்த பலரையும் சந்தித்து, ஆலோசனைகளை பெற்றேன். நீண்ட திட்டமிடலுக்கு பின்னர், கடந்த 8 மாதங்களுக்கு முன் எனது கிராமத்தில் இந்த பண்ணையை அமைத்தேன். ஆரம்பத்தில் ரூ.22 லட்சம் முதலீட்டில் 20 கழுதைகளுடன் இந்த பண்ணையை தொடங்கினேன்" என்றார்.
எதற்கு கழுதைப் பால்...?
மேலும் இந்த தொழில் ஆரம்பத்தில் மிக கடினமாக இருந்ததாகவும், குஜராத்தில் பெரிதாக கழுதை பாலுக்கு எவ்வித டிமாண்டும் இல்லை என்றும் தெரிவித்தார். முதல் 5 மாதங்களில் தனக்கு வருமானமே வரவில்லை என்றும் அவர் கூறினார். அதன்பின்னர் தான் அவர் தென்னிந்தியாவில் கழுதைப் பாலுக்கு டிமாண்ட் இருக்கும் சில நிறுவனங்களை தொடர்புகொண்டதாக தெரிவித்தார். தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் கழுதைப் பாலை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார். அதாவது, அந்நிறுவனங்கள் அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கின்றன. தனது தயாரிப்புகளில் அவை கழுதைப் பாலை பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.
கழுதை பாலை பவுடராக விற்றால்...
மேலும் கழுதைப் பாலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை விற்பனையாகும் எனவும் சோலங்கி தெரிவித்தார், அதே நேரத்தில் பசும்பாலின் விலை ஒரு லிட்டருக்கு 75 ரூபாய்தான். சோலங்கி பண்ணையில் எடுக்கப்படும் கழுதைப் பாலை ஃபிரீஸரில் வைத்து அதனை கெடாமல் பார்த்துக்கொள்கிறார்.
குறிப்பாக, கழுதைப் பாலை காயவைத்து, பவுடராக்கி விற்றால் அதன் விலை இன்னும் கூடுதல் ஆகும். அதாவது, ஒரு கிலோ பவுடரின் விலை லட்சத்தையும் தாண்டும் என கூறினார். தற்போது சோலங்கியின் பண்ணையில் மொத்தம் 42 கழுதைகள் உள்ளன. குறிப்பாக, இதுவரை 38 லட்சம் முதலீடு செய்திருப்பதாக அவர் கூறினார். ஆன்லைன் மூலம் தினமும் 5 ஆயிரம் லிட்டர் கழுதைப் பாலை விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ