தேர்தல் காரணமாக இத்தனை நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்! முழு விவரம்!
Liquor Shop Close: ராஜஸ்தானில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு முடியும் வரை அங்கு மது கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
Liquor Shop Close: 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 18வது மக்களவை ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெறும். ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். பீகார், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
மேலும் படிக்க | உலகிலேயே இந்தியாவில் மிக மலிவான விமான கட்டணங்கள்: ஆகாசா ஏர் நிறுவனத்தின் CEO
லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் அட்டவணையின்படி ராஜஸ்தானில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தை ட்ரை டே (dry day) என்று அதாவது மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 வரை மாநிலம் முழுவதும் ட்ரை டே இருக்கும். முதல் கட்டமாக அங்கு ஸ்ரீகங்காநகர், பிகானேர், சுரு, ஜுன்ஜுனு, சிகார், ஜெய்ப்பூர் ரூரல், ஜெய்ப்பூர், அல்வார், பரத்பூர், கரௌலி-தோல்பூர், தௌசா மற்றும் நாகௌர் ஆகிய 12 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் பாகிதௌரா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக, ஏப்ரல் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை மாநிலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று குப்தா கூறினார். டோங்க்-சவாய் மாதோபூர், அஜ்மீர், பாலி, ஜோத்பூர், பார்மர், ஜலோர், உதய்பூர், பசன்வாடா, சித்தோர்கர், ராஜ்சமந்த், பில்வாரா, கோட்டா மற்றும் ஜலவர்-பரான் ஆகிய 13 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனுடன், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மக்களவை தேர்தல்
543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு ஏப்ரல் 19 மற்றும் ஜூன் 1 க்கு இடையில் நடைபெறும் மற்றும் ஜூன் 4 ஆம் தேதி முடிவு வெளியிடப்படும். ராஜஸ்தானை பொறுத்தவரை மாநிலத்தின் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 19-ம் தேதி கங்காநகர், பிகானேர், சுரு, ஜுன்ஜுனு, சிகார், ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் ரூரல், அல்வார், பாரத்பூர், கரௌலி-தோல்பூர், தௌசா மற்றும் நாகௌர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும். அஜ்மீர், பன்ஸ்வாரா, பார்மர், பில்வாரா, சித்தோர்கர், ஜலோர், ஜலவர்-பரான், ஜோத்பூர், கோட்டா, பாலி, ராஜ்சமந்த், டோங்க்-சவாய் மாதோபூர், உதய்பூர் மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
மேலும் படிக்க | இலவச LPG சிலிண்டர்... ஹோலி பண்டிகையை ஒட்டி இந்த மாநில மக்களுக்கு கிடைத்துள்ள பரிசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ