உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்களுக்கு பிடித்த டிவி தொடர்களைப் (Tv Shows) பார்க்க யாராவது பணம் கொடுத்தால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அப்படியெல்லாம் யாராவது செய்வார்களா என நீங்கள் எண்ணினால், அப்படியும் செய்ய சிலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரு பிரிட்டிஷ் லவுஞ்ச்வேர் பிராண்ட் (Loungewear Brand) இதைச் செய்ய மக்களை வேலைக்கு அமர்த்த ஆவலாய் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லவுஞ்ச்வேர் பிராண்டான Pour Moi நிறுவனம் தனது தயாரிப்புகளான சில பைஜாமாக்கள் மற்றும் பிற ஆடை வகைகளின் கச்சிதத்தையும் வசதியையும் சோதிக்க சிலரை பணியமர்த்த விரும்புகிறது. இதற்கு ஊதியமாக இந்த நிறுவனம் 300 யூரோக்கள் வரை வழங்க தயாராக உள்ளது.


இந்த செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால், இந்த நிறுவனம் இதைத்தான் விரும்புகிறது. ஒருவர், நிறுவனத்தின் ஆடைகளை அணிந்து கொண்டு நாள் முழுதும் வீட்டிலேயே இருக்க வேண்டும். இதற்கான நபர்களை நியமிக்க நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.


இந்த தனித்துவமான பணம் ஈட்டும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், அக்டோபர் 12-க்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், இதற்காக லவுஞ்ச்வேர் பிராண்டால் அமைக்கப்பட்ட விதிகளைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பணிக்காக நீங்கள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் என்று நிறுவனத்தின் விளம்பரம் கூறுகிறது:


ALSO READ: 75 ஆண்டுகளாக மரத்தடியில் இலவச கல்வி புகட்டி வரும் இவர் மனித உருவில் இருக்கும் கடவுள்தானே!!


-உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூன்று அத்தியாயங்களை ஒரு சோபா / படுக்கையில் அமர்ந்து / படுத்தபடி பார்க்க வேண்டும்.


-சொபாவில் அமர்ந்தபடி மதுவையோ ஹாட் சாக்லேட்டையோ ருசித்தபடி ரிலேக்ஸ் செய்ய வேண்டும்.


-டீ, காபி அல்லது உங்களுக்குப் பிடித்த பானத்தை தயார் செய்து பருக வேண்டும்.


- குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது உங்கள் தொலைபேசியின் சமூக ஊடக செயலிகளில் (Social Media Apps) செலவிட வேண்டும்.


இவற்றை செய்யும்போது, தேர்ந்தெடுக்கப்படும் நபர் Pour Moi ஆடைகளை குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது அணிய வேண்டும். அதன் பின்னர், இது குறித்த ஒரு ரிப்போர்ட் எழுதி அனுப்பி, நிறுவனம் சொல்லியிருக்கும் தொகையை அவர் பெறலாம்.


நிறுவனம் வகுத்துள்ள விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அவ்வப்போது தன் ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் Pour Moi நிறுவனம் வழங்கிய ஆடைகளில் குறைந்தபட்சம் ஆறு லவுஞ்ச்வேர்களையாவது போட்டுப் பார்க்க வேண்டும். அந்த ஆடைகளை பின்னர் அந்த நபரே வைத்துக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் சிறந்த பகுதி என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்படும் நபர், அந்த ஆடைகளை அணிந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் (Social Media) வெளியிட வேண்டிய அவசியமில்லை.


விண்ணப்பங்களுக்கான அழைப்பு அக்டோபர் 12 வரை உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் அக்டோபர் 26 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: தனது வாழ்க்கையை மனித சேவைக்காக அர்ப்பணித்த Kolkata-வின் Real Life Hero Bipin Ganatra!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR