கோபக்கார மனைவியை சிரிக்க வைக்க கணவர்களுக்கான டிப்ஸ்
கோபக்கார மனைவியை உடனடியாக சிரிக்க வைக்க கணவர்கள் படாதபாடுபடுகிறார்கள். அவர்களுக்கான சூப்பரான டிப்ஸ்
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் அழகானது, மென்மையானது. இந்த உறவில் காதல், நட்பு, சச்சரவுகள் எல்லாம் இருக்கும். நல்ல உறவுக்கு இவையெல்லாம் அவசியம். ஆனால் என்ன நடந்தாலும், கணவன் மனைவிக்குள் சண்டை சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் அது நீண்ட காலம் நீடித்தால், உறவுக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் கணவன்-மனைவி இடையே உணர்ச்சிபூர்வமான பிணைப்பு மிகவும் முக்கியமானது.
திருமணமான எல்லா ஆண்களுக்கும் தெரியும், கோபத்தில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்காக பல பகீரத முயற்சிகளைக் கூட செய்வார்கள். தெருவில் குட்டிக்கரணம் அடிப்பது முதல் மனைவியிடம் முழுமையாக சரணாகதி அடைந்து கெஞ்சிக் கூத்தாடுவது வரை என எல்லா காட்சிகளும் அப்போது அரங்கேறும். மனைவிகளே கூட யோசிப்பாளர்கள், இது என் கணவன் தானா? என்று. அந்தளவுக்கு அவர்களின் ஆக்டிங் இருக்கும்.
மேலும் படிக்க | Relationship Tips: மண வாழ்க்கை முறிவுக்கு காரணமான ’அந்த’ 3 தவறுகளை செய்யாதீர்கள்
ஆனால், உங்களின் முயற்சிகள் கைகூடவில்லை என்றால், என்ன செய்யலாம் என்பதற்கு சில டிப்ஸ்கள் இங்கே இருக்கின்றன. இந்த 4 டிப்ஸ்களையும் முயற்சி செய்து பாருங்கள். கிடைத்தால் மகிழ்ச்சி இல்லையென்றால் பயிற்சி.
கோபத்துக்கான காரணம்
ஒரு நல்ல கணவனின் முதல் வேலையே மனைவி ஏன் கோபப்படுகிறாள் என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். கோபத்துக்கான பின்னணி என்பதை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் மனைவியின் மனக்கசப்புக்கான காரணம் உங்களுக்குத் தெரியாவிட்டாலும், முதலில் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் தனியாக இருக்கும்போது உங்கள் மனைவியுடன் பேசுங்கள். அவள் சொல்வதைக் கேளுங்கள். நிச்சயம் கோபத்துக்கான காரணம் தெரியவரும்.
மனைவிக்கு நேரம் கொடுங்கள்
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில், வீடு மற்றும் அலுவலகம் இரண்டையும் நிர்வகிப்பதில் ஏற்படும் மன அழுத்தம் சில சமயங்களில் மனைவியை கோபப்படுத்தலாம். மனைவி மிகவும் கோபமாக இருந்தால், அவளை அமைதிப்படுத்த நேரம் கொடுங்கள். அவளுடைய கேள்விகளுக்கு கோபத்துடன் உடனடியாக பதிலளித்தால், விஷயம் மோசமாகிவிடும். எனவே அவளை அமைதிப்படுத்த நேரம் கொடுங்கள்.
பூக்களை பரிசளியுங்கள்
பெண்கள் பூக்கள் மற்றும் சர்பிரைஸான பரிசுகளை விரும்புகிறார்கள். அதனால், மனைவி கோபமாக இருந்தால், பரிசுகளை கொடுத்து சமாதானப்படுத்த முயலலாம். அலுவலகம் முடிந்து திரும்பும் போது மனைவிக்கு அழகான பூங்கொத்து வாங்கி வாருங்கள். அது உங்கள் மனைவியின் கோபத்தை தணிக்கும். சிறிய பயணத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். இது பிரச்சனையின் திசை இல்லாமல் போக வழிவகுக்கும்.
ஷாப்பிங் அழைத்துச் செல்லுதல்
கோபத்தை தணிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு போதுமான நேரத்தைக் கொடுத்து, ஆசுவாசமாகிவிட்டார்களா? என பார்த்தபிறகு மெதுவாக பேச்சுக் கொடுங்கள். ஏதேதோ பேசி கடைசியாக ஷாப்பிங் செல்லலாம் என அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் முகத்தில் வரும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. பிடித்த பொருளை அழைத்துச் சென்று வாங்கித் தருகிறீர்கள் என்றால், சமாதானம் சமிக்கைகள் பறந்து வரும். இருவருக்கும் இடையே மகிழ்ச்சி தாண்டவமாடும்.
மேலும் படிக்க | குழந்தைகளை பாதிக்கும் பெற்றோர்களின் 4 கெட்ட பழக்கங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR