ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பிடிக்கவில்லையா? மாற்றுவதற்கான எளிய வழிகள்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (யூஐடிஏஐ) வழங்கப்படும் ஆதார் அட்டையில் குடிமகனின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற அனைத்து தனிப்பட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வங்கி, வாகனப் பதிவு மற்றும் காப்பீட்டுக் கொள்கைகள் போன்ற பல்வேறு விதமான முக்கிய சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக செயல்படுகிறது. இந்தியக் குடிமக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (யூஐடிஏஐ) வழங்கப்படும் ஆதார் அட்டையில் குடிமகனின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற அனைத்து தனிப்பட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும். ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பெரும்பாலும் நமக்கு திருப்திகரமானதாக இல்லை, எவ்வளவு அழகான நபரின் ஆதார் அட்டை புகைப்படமும் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்பதே பலரின் தனிப்பட்ட கருத்தாக உள்ளது. இப்போது ஆதார் அட்டையிலுள்ள புகைப்படத்தை மாற்ற விரும்புபவர்கள் கீழ்கண்ட படிகளை பின்பற்ற வேண்டும்.
1) uidai.gov.in என்கிற யூஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.
2) ஆதார் பதிவு படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.
3) தேவையான அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
4) ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
5) உங்கள் புதிய படத்தை மையத்தில் கிளிக் செய்யவும்
6) இதற்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
7) அக்னாலெட்ஜ்மென்ட் ஸ்லிப் மற்றும் யூஆர்என் எண் கிடைக்கப்பெறும்.
8) இந்த யூஆர்என் மூலம் உங்கள் ஆதார் அட்டையின் அப்டேட்டை கண்காணிக்கவும்.
புகைப்படம் அப்டேட் செய்யப்பட்ட ஆதார் அட்டையை பெற 90 நாட்கள் வரை ஆகலாம். ஆதார் அட்டைக்காக உங்கள் புகைப்படத்தை கிளிக் செய்து பெற ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இனி வாட்ஸ்அப் மூலம் எல்ஐசி-யின் இந்த சேவைகளை பெறலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ