நமது உடலில் இருக்கும் தசைகள்,உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்புகளின் பலம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு எலும்புகள் பலவீனம் அடைவது இயல்புதான் என்றாலும் தற்காலத்தில் 30 வயதை நெருங்கிவிட்டாலே பலருக்கு எலும்பு தேய்மானம் வந்துவிடுகிறது. இதனால் பலரும் மூட்டு வலி, முதுகு வலி, கை வலி என வலிகளுக்குள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். இப்படி எலும்புகள் பலவீனமடைவதை நாம் அன்றாடம் உண்ணும் பொருள்கள் மூலமாகவே தடுக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோயா பொருட்கள்:


எடமேம், டோஃபு, டெம்பே மற்றும் சோயா பானங்கள் போன்ற சோயா பொருட்களில் எலும்புகளை உருவாக்கும் புரதங்கள் அதிகளவில் உள்ளதால் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.


காய்கறிகள்:


முட்டைக்கோஸ், காலே, கீரை, ப்ரோக்கோலி போன்ற இலை வகை காய்கறிகளில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் என எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை உங்களுடைய அன்றாட உணவுமுறைகளில் சேர்த்துக் கொள்ளும்போது எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்க மட்டுமில்லாமல் உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம்.


மேலும் படிக்க | பெண்களுக்கு குட் நியூஸ்! இன்று புற்று நோய் தடுப்பூசி அறிமுகம்! விலை ரூ. 200-400 வரை இருக்கலாம்


கால்சியம் நிறைந்த பால், புரதம் நிறைந்த முட்டை, பருப்பு வகைகள், அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளை நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே சாப்பிட்டு வந்தால் நிச்சயம் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதோடு முறையான உடற்பயிற்சியும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம்.


பீன்ஸ்:


சுண்டல், கொண்டைக்கடலை, பட்டாணி, கருப்பு மொச்சை போன்ற பல வகைப் பயறுகளில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், உடலுக்குத் தேவையான ஊட்டசத்துக்களையும் வழங்கவும் உதவியாக உள்ளது.


மேலும் படிக்க | உடல் எடை அதிகரிப்பால் அவதியா? இந்த சுவையான சாலட் சாப்பிட்டு எடையை குறைக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ