கல்விக் கடன்: இந்த காலத்தில் உயர் கல்விக்கு ஆகும் செலவு மிக அதிகமாக இருக்கின்றது. சிலரால் இதற்காக செலவழிக்க முடிகின்றது. எனினும், அனைவராலும் அது முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு கல்விக்கடன் மிக உதவியாக இருக்கும். ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கனவை நிஜமாக்க இது பெரிதும் உதவுகிறது. வறுமையால் கல்வி தடைபடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் உயர்கல்விக்கு (பட்டப்படிப்பு, முதுகலை, பிஎச்டி, தொழில்நுட்ப அல்லது தொழில்முறை படிப்பு) கடன் வாங்க விரும்பி, அடமானம் வைக்க உங்களிடம் எதுவும் இல்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மத்திய அரசு மூலம் மத்திய துறை வட்டி மானிய திட்டம் (Central Sector Interest Subsidy Scheme) தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கடன் வழங்கப்படுகிறது. இதில் 100% வரை கடன் மானியம் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடனில் மானியம் பெறுவது எப்படி


1. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 4.5 லட்சம் வரை உள்ள மாணவர்கள்


2. இளங்கலை, முதுகலை, பிஎச்டி, தொழில்நுட்பம் அல்லது தொழில்முறை படிப்புகள் படிக்கும் மாணவர்கள் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதனுடன், அரசு நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.


3. இடையில் படிப்பை விட்டு வருபவர்களுக்கு வட்டியில் மானியம் வழங்கப்படுவதில்லை.


EMI எப்போது செலுத்த வேண்டும்


CSIS திட்டத்தில் கடன் வாங்கியவுடன் உடனடியாக EMI கட்ட வேண்டியதில்லை. படிப்பை முடித்து ஓராண்டு கால அவகாசம் கிடைக்கும். அதன் பிறகு மாணவர் கடனுக்கான இஎம்ஐ செலுத்த வேண்டும். இந்த கடனுக்கான வட்டிக்கு அரசு மானியம் வழங்குகிறது.


இப்படி விண்ணப்பிக்கவும்


ஸ்டெப் 1: ஜன்சமர்த்தின் இணையதளமான jansamarth.in க்குச் செல்லவும்.


ஸ்டெப் 2: கல்விக் கடனுக்கான விருப்பம் முதல் பக்கத்தில் தோன்றும். check eligibility விருப்பத்தை கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 3: எந்தப் படிப்பு, பாடத்தின் காலம், குடும்பத்தின் ஆண்டு வருமானம் போன்ற பொதுவான விவரங்களை இங்கே நீங்கள் நிரப்ப வேண்டும். இவற்றைத் தேர்ந்தெடுத்த பிறகு, calculate eligibilty என்பதைக் கிளிக் செய்யவும்.


மேலும் படிக்க | அருமையான திட்டம்...மாதம் ரூ.210 செலுத்தினால் போதும் ரூ.60,000 ஓய்வூதியம் கிடைக்கும்


ஸ்டெப் 4: உங்கள் படிப்புக்கு அரசாங்கம் எவ்வளவு கடன் கொடுக்கலாம், எவ்வளவு வட்டி இருக்கும், எவ்வளவு EMI இருக்கும் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். அதன் பிறகு விண்ணப்பிக்க லாக் இன் என்பதைக் கிளிக் செய்யவும்.


படி 5: உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும். கடன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் புதிய பக்கம் திறக்கும், அவற்றை கவனமாக படிக்கவும். பொறுப்பு துறப்பை படித்த பிறகு, இடது பக்கத்தில் உள்ள பெட்டியைக் கிளிக் செய்து, அதற்கு மேலே உள்ள Agree என்பதைக் கிளிக் செய்யவும்.


படி 6: Get OTP என்பதைக் கிளிக் செய்யவும். மொபைலில் OTP வரும், அதை நிரப்பி செயல்முறையை முடிக்கவும். இதற்குப் பிறகு நீங்கள் ஆதார் அட்டை, பான், வங்கி விவரங்களைக் கொடுக்க வேண்டும்.


படி 7: அனைத்து விவரங்களையும் சேமிக்கவும் (சேவ் செய்யவும்). அதன் பிறகு இந்த விவரங்கள் சரிபார்க்கப்படும். நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், உங்களுக்கு கடன் கிடைக்கும்.
 
இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவிற்கு வெளியே கல்விக்காக கடன் வாங்க முடியாது.


மேலும் படிக்க | குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ