புதுடெல்லி:  இந்தியாவில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். பணவீக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் மாதச் செலவு மேலும் அதிகரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Automatic Pass-through Model கீழ், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது, ​​டிஸ்காம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் மின்சார கட்டணத்தை மின் விநியோக நிறுவனங்கள் உயர்த்தும்.  


ஏற்கனவே பெட்ரோல், டீசல் முதல் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு பெரிய பின்னடைவு ஏற்படலாம் என்பது கவலை தருகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை உயரும் போது, ​​மின் உற்பத்தி நிறுவனங்களின் விலையும் கூடுவது இயல்புதான்


நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களும், மின் விநியோக நிறுவனங்களும் (Discom) பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. நிலக்கரியே நமது நாட்டின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக உள்ளது. இந்தியா நிலக்கரியை பெரிய அளவில் இறக்குமதி செய்துவரும் சூழ்நிலையில், நிலக்கரி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் Automatic Pass-through Model வழிமுறையை மத்திய மின் துறை வெளியிட்டுள்ளது.


இந்த மாடலின் கீழ், எதிர்கால ஒப்பந்தத்திற்குப் பிறகு எரிபொருள் விலை அதிகரித்தால், அரசாங்க டிஸ்காம்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். ஒப்பந்தத்தை விட மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த நடவடிக்கையால்,மின் விநியோக நிறுவனங்களின் அதாவது டிஸ்காம்களின் நிதி நிலையும் மோசமடையலாம்.


Also Read | கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து; விரைவில் இந்தியாவில் அறிமுகம்


மின்சாரத்தை பொதுமக்களுக்கு விநியோகிப்பதும், அதற்குப் பதில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதும் டிஸ்காமின் வேலை. இதுபோன்ற சூழ்நிலையில், எரிபொருள் விலை அதிகரிக்கும் போது, ​​டிஸ்காம்கள் மின் உற்பத்தியாளர்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும், ஆனால் அரசியல் அழுத்தம் மற்றும் மக்களின் எதிர்ப்பால்,  மின் கட்டணத்தை அதிகரிப்பது கடினம். 


இருந்தாலும், தற்போது வேறுவழியில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை டிஸ்காம் எடுக்கும், அதன் தாக்கம் பொதுமக்களின் பாக்கெட்டில் எதிரொலிக்கும். இனிமேல், மின்சாரத்திற்கு முன்பை விட அதிக விலை கொடுக்க வேண்டி வரும்.


நிலக்கரி பற்றாக்குறையால், நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்கள் மின்சாரம் தயாரிக்க முடியாமல் முடங்கின. தனியார் நிறுவனங்கள் நிலக்கரி நிறுவனங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும். பணப்புழக்கம் இல்லாததால், சேமிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று.


இந்த மாதிரி ஏற்கனவே சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரச் சட்டத்தின் பிரிவு 62(4) எரிபொருளின் விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால், ஒரு வருடத்தில் பல முறை மின் கட்டணத்தை புதுப்பிக்கலாம் என்று கூறுகிறது. தற்போது இந்தியாவின் சில மாநிலங்களில் Automatic Pass-through Model அமலில் உள்ளன.


Automatic Pass-through Model ஒப்பந்த விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதற்கு முன் மாநில ஆணையத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். நவம்பர் 9 ஆம் தேதி புதிய மாடல் தொடர்பான வழிமுறைகளை மத்திய மின் அமைச்சகம் வெளியிட்டது.


Also Read | மழை வெள்ளத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 பேரை மீட்டது NDRF


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR