"பக்கோடா வேலை" என்ற பெயரில் நாடுமுழுவதும் ஆங்காங்கே பட்டதாரிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் வேலைவாய்பு நிலைபாடு குறித்து உலக வங்கி கருத்து தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் பட்டாதாரிகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அதனை அதிரிக்க வேண்டும் எனவும் உலக வங்கி இந்தியாவிற்கு அறிவுறுத்தியுள்ளது.


2005 - 2012 காலக்கட்டத்தின் நிலைகளை கொண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் பணிபுரியும் வயதிற்கு உட்பட்டவர்கள் 13 மில்லியனாக உயர்ந்துள்ளது எனவும், ஆனால் அதே காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 3 மில்லியன் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.


மேலும், பொதுதுறை பணிகளில் இருப்பவர்களில் சுமார் 5% சதவிதத்தினர் மட்டுமே நல்ல வேலையில் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கணக்கெடுப்பானது, எண்ணிக்கையினை பெறுத்தது மட்டும் அல்ல, அவர்களின் வருமானம் குறித்தும் ஆகும். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் குறைந்த ஊதியத்திற்கே பணிபுரிந்து வருகின்றனர். 


இந்தியாவில் அதிக அளவிலாக ஊதியம் கிடைக்கப்பெறும் அளவிற்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்ட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்!