இபிஎஃப்ஓ புதுப்பிப்பு: இபிஎஃப்ஓ எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதன் உறுப்பினர்களுக்கு பரந்த அளவிலான வசதிகளை வழங்குகிறது. இந்த வசதிகள் அனைத்தையும் பயன்படுத்துவது ஊழியர்களுக்கு பெரும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் இபிஎஃப்ஓ சந்தாதாரராக இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இபிஎஃப்ஓ ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை வழங்கியுள்ளது. இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்களை வரவேற்கும் வகையில் ட்வீட் செய்துள்ளது. எதற்கு இந்த ட்வீட்? இதன் மூலம் இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு என்ன சொல்ல வருகிறது? அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப்ஓ ட்வீட் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது


இபிஎஃப்ஓ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து டிசம்பர் 19 அன்று ஒரு ட்வீட் செய்துள்ளது. "பிஎஃப் பங்களிப்பை செலுத்தாத முதலாளிகள் இழப்பீட்டை ஏற்பதோடு செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டி செலுத்த வேண்டும்" என்று இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.



இபிஎஃப்ஓ இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளது


இதனுடன், இபிஎஃப்ஓ ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. அதில் இழப்பு மற்றும் வட்டியை இபிஎஃப்ஓ க்கு செலுத்த வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் பங்களிப்பில் தவறிழைக்கப்பட்டால், இபிஎஃப்ஓ இழப்பின் பிரிவு 14B மற்றும் வட்டியின் 7Q இன் கீழ் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த வேண்டும் என்று அது மேலும் கூறுகிறது.


மேலும் படிக்க | PF Account: பாலன்ஸ் செக் செய்வது மிக எளிது, இதை மட்டும் செய்தால் போதும் 



இபிஎஃப்ஓ இழப்புகளை மீட்பதற்கான விகிதத்தை வெளியிட்டது


இபிஎஃப்ஓ அந்த முதலாளிகளிடமிருந்து மீட்கப்படுவதற்கான இழப்பீட்டுக்கான விகிதங்களையும் வழங்கியுள்ளது. நஷ்டத்தை 2 மாதங்களுக்குள் ஆண்டுதோறும் 5 சதவீதம் என்ற விகிதத்தில் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2 முதல் 4 மாதங்கள் வரையிலான காலப்பகுதியில், இழப்பு ஆண்டுதோறும் 10 சதவிகிதம் வசூலிக்கப்படும். 4 முதல் 6 மாத காலத்திற்கு, ஆண்டுதோறும் 15 சதவீதம் இழப்பீடு வசூலிக்கப்படும். 6 மாதங்களுக்கும் மேலான பிறகு, ஆண்டுதோறும் 25 சதவீதம் இழப்பீடு வசூலிக்கப்படும். இதனுடன், எந்த வித இழப்பையும் தவிர்க்க, அனைத்து உறுப்பினர்களும் தங்கள் EPF பங்களிப்பை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும் என்று இபிஎஅப்ஓ தெரிவித்துள்ளது.


மேலம் படிக்க | EPFO: 8.1% வட்டி அளிக்கும் பாதுகாப்பான அரசாங்க திட்டம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ