EPFO Important News: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை அளித்துள்ளது. உறுப்பினர்கள், தங்கள் குடும்பத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்றே இ-நாமினேஷனை (E-Nomination) தாக்கல் செய்ய வேண்டும் என்று EPFO தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF / EPS நாமினேஷனை டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்ய, உறுப்பினர்கள் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இந்த பணியை செய்யலாம்.


ஆன்லைனில் பிஎஃப் நாமினேஷனை (PF Nomination) பதிவு செய்ய, உறுப்பினர்கள், EPFO ​​இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 


இது குறித்த விளக்கத்தை, இபிஎஃப்ஓ தனது ட்விட்டர் கணக்கில் அளித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் முறையில் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் நாமினியின் பெயரை எவ்வாறு சேர்ப்பது அல்லது மாற்றுவது என்பது குறித்த தகவலை EPFO அளித்துள்ளது. 


நாமினி பெயரை சேர்ப்பதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்:


- முதலில், நீங்கள் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in இல் லாக் இன் செய்ய வேண்டும்.


- பின்னர் 'Service'-ல் சென்று 'For Employees' என்ற டேபை கிளிக் செய்ய வேண்டும்.


ALSO READ | வெறும் 15 ஆயிரத்தில் தொழில் தொடங்குங்கள், மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம் 


- Services-ல், 'Member UAN/Online Service (OCS/OTCP)'-ல் கிளிக் செய்ய வேண்டும். 


- உங்களது UAN மற்றும் கடவுச்சொல் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.


- 'Manage' டேபிற்குள் 'E-Nomination'-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். 


- குடும்ப விவரங்களை அப்டேட் செய்ய 'Yes' என்பதைக் கிளிக் செய்யவும்


- பின்னர் 'Add Family Details-ல் கிளிக் செய்யவும்.


- மொத்தத் தொகையை பற்றிய விவரங்களை அளிக்க 'Nomination Details-ல் கிளிக் செய்யவும்.


- டிக்லரேஷன் செய்த பிறகு, 'Save EPF Nomination'-ல் கிளிக் செய்யவும்.


- OTP-ஐ பெற 'E-sign'-ல் கிளிக் செய்யவும்.


- உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.


- OTP ஐ உள்ளிடவும்.


- இதனுடன், EPFO ​​இல் உங்கள் E-nomination பதிவு நிறைவடையும்.



இ-நாமினேஷனுக்குப் பிறகு, நீங்கள் எந்த ஒரு ஆவணத்தையும் பிசிக்கலாக சமர்ப்பிக்கத் தேவையில்லை. இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நீங்கள் இ-நாமினேஷனை நிறைவு செய்தால், வீட்டில் இருந்தபடியே எளிதாக, உங்கள் EPF கணக்கில் நாமினியின் பெயரை சேர்க்க முடியும். 


ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 14,4200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR