Paytm offer: உங்க வங்கி கணக்கு 0 ஆக இருந்தாலும், Paytm மூலம் பணம் செலுத்தலாம்!
டிஜிட்டல் நிதி சேவை தளமான Paytm அதன் வாடகை கட்டண அம்சத்தை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது..!
டிஜிட்டல் நிதி சேவை தளமான Paytm அதன் வாடகை கட்டண அம்சத்தை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது..!
நீங்கள் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு வாடகையை (Home Rent) ஆன்லைனில் செலுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆம்!! ரூ .1000 வரை Cashback பெற உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.
இப்போது, வாடகை வீட்டில் இருக்கும் நபர்கள் தனகளது மாதாந்திர வாடகையை (Home rent payment) உடனடியாக தங்கள் கிரெடிட் கார்டுகள் (credit card) மூலம் தங்கள் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம். இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ .1000 வரை கேஷ்பேக் வழங்குவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் கேஷ்பேக் சம்பாதிப்பதைத் தவிர, பயனர்கள் கிரெடிட் கார்டு புள்ளிகளையும் இதனால் சேகரிக்க முடியும்.
இதை எவ்வாறு பயன்படுத்துவது?
- வீட்டு உரிமையானருக்கு வாடகைப் பணம் செலுத்தும் போது, வாடகையில் இருக்கும் நபர், Paytm முகப்புத் திரையில் உள்ள “Recharge & Pay Bills” பிரிவில் இருந்து "Rent Payment”- ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பயனர்கள் கிரெடிட் கார்டிலிருந்து நேரடியாக வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றலாம்.
- UPI, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற பிற கட்டண முறைகள் மூலம் வாடகை செலுத்தும் நெகிழ்வுத்தன்மையையும் தருவதாக Paytm கூறுகிறது.
- வாடகை செலுத்துபவர், வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்கு விவரங்களை மட்டுமே உள்ளிட்டால் போதும், வேறு எதுவும் உள்ளிட தேவை இல்லை.
- டாஷ்போர்டு அனைத்து வாடகை கட்டணங்களையும் கண்காணிக்க உதவுகிறது. கட்டணம் செலுத்த வேண்டிய தேதிகளையும் இது நினைவூட்டுகிறது. மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு உடனடி கட்டண உறுதிப்படுத்தலையும் இது அனுப்புகிறது.
ALSO READ | இனி Paytm மூலமும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் - இங்கே செயல்முறை!
இது குறித்து Paytm இன் துணைத் தலைவர் நரேந்திர யாதவ் கூறுகையில்., "வீட்டு வாடகை என்பது நம் நாட்டில் வாடகை வீடுகளில் இருப்பவர்களின் அதிகபட்ச தொடர் செலவாகும். இந்த இக்கட்டான சூழலில், அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குள், எங்கள் வாடகை செலுத்தும் அம்சம் ஏற்கனவே மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பணப்புழக்கத்தை பராமரிக்க உதவி வருகிறது. மேலும், அவர்களின் கிரெடிட் கார்டு சுழற்சியின் படி வாடகையை அவர்கள் செலுத்துகின்றனர். இந்த சேவையின் விரிவாக்கத்துடன், வாடகைக் கொடுப்பனவுகளில் Paytm அதன் சந்தைத் தலைமையை தொடரும்.” என்றார்.
மேலும், "நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு பயன்பாட்டு பில்கள், கிரெடிட் கார்டு பில்கள் போன்ற தொடர் கட்டணங்களை செலுத்துவதில் அதிகப்படியான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். விரைவில், கல்வி கட்டணம், வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு பணம் செலுத்தவும், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் செயல்முறை செயலாக்கப்படும்.” என்று கூறினார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR