Rasi: ஒருவருக்கு ஒன்றல்ல, 3 ராசிகள் உள்ளன! எது எந்த நேரத்தில் செயல்படும் தெரியுமா?
பொதுவாக பிறந்த தேதியன்று இருக்கும் ராசியே ஜன்ம ராசியாக இருக்கும். அதைத்தவிர இன்னும் இரண்டு ராசிகள் நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்
புதுடெல்லி: பொதுவாக பிறந்த தேதியன்று இருக்கும் ராசியே ஜன்ம ராசியாக இருக்கும். அதைத்தவிர இன்னும் இரண்டு ராசிகள் நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நம்மில் பெரும்பாலானோர் தினசரி ஜாதக பலனை பார்க்கும்போது ராசி எது என்று குழப்பம் ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஜோதிடக் கணக்கீடுகள் மூலம் கணக்கிடப்படும் ஜாதகம் மிகவும் துல்லியமானது. அப்புறம் எங்கே பிரச்சனை என்ற கேள்விகளும் எழுகின்றன.
உண்மையில், ஜாதகம் வெவ்வேறு வழிகளில் கணக்கிடப்படுகிறது, அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பெயர் ராசி சரியா அல்லது பிறந்த தேதியா?
பலருக்கு அவர்களின் சரியான ராசி எது, தங்கள் பெயரின் முதல் எழுத்தின் படி வெளிவருவதா அல்லது ஜாதகத்தில் கொடுக்கப்பட்டிருப்பதா அல்லது பிறந்த தேதியில் இருக்கும் ராசியை எடுத்துக் கொள்வதா (Rasipalan of Horoscope) என்ற குழப்பம் உள்ளது.
ஜோதிட சாஸ்திரப்படி இந்த மூன்று ராசிகளும் சரியானவை. கணக்கீட்டின் அடிப்படையில், ஒரே நபரின் ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகள் வெளிவருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜாதகம் பார்க்கும்போது அந்தந்த ஜாதகத்தின் கணக்கீட்டின்படி அவரவர் ராசியைப் பார்க்க வேண்டும்.
Also Read | 2021 மார்கழி மாதம் முதல் நாள்! திருப்பாவை திருவெம்பாவை பாடி அருள் பெறுக எம்பாவாய்!!
ராசி பலன் பிறந்த தேதி: பிறந்த தேதியன்று இருக்கும் ராசி, சூரிய ராசி என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் ஜாதகத்தில் ராசியுடன் தேதிகள் எழுதப்பட்டு அந்தந்த தேதிகளுக்கு இடையில் பிறந்தவருக்கு ஒரே ராசி இருக்கும். உண்மையில், சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒன்றில் இருந்து மற்றொரு ராசிக்கும் செல்வார். குறிப்பிட்ட மாதத்தில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறார் என்பதன் அடிப்படையில், இந்த ஜாதகம் கணக்கிடப்படுகிறது. சூரிய ராசியின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஜாதகம், சமூக நிலை மற்றும் சமூக-அரசியல் உறவுகளில் ஏற்ற தாழ்வுகளை துல்லியமாக கூறுகிறது.
ராசியின்படி ஜாதகம்: ஜாதகத்தில் ஒருவரின் ராசி எழுதப்பட்டிருக்கும், அது அவரது லக்னத்தின் ராசியாகும். லக்னத்தின் ராசியின்படி ஜாதகம் கணக்கிடப்படும்போது, அது ஆரோக்கியம், மன உறுதி, விபத்து போன்றவற்றைக் கூறுகிறது.
பிறந்த பெயருக்கு ஏற்ப ஜாதகம்: பிறந்த நேரத்தில் அந்த நபரின் ராசி என்ன என்பதைப் பொறுத்து ஜாதகமும் கணிக்கப்படுகிறது. இதற்கு, சந்திரன் ராசியின் பலனைப் பார்க்க வேண்டும். சந்திரன் மனதின் காரகன் என்பதால், சந்திரனின் ஜாதகம் மன நிலையைக் கணக்கிடுதல், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றைப் பற்றி நன்றாகச் சொல்கிறது.
அதே சமயம் பெயரை வைத்து ஜாதகம் பார்ப்பதில் அர்த்தமில்லை. ஒருவரது பெயர் என்பது பெற்றோர் அல்லது குடும்பத்தினரால் வைக்கப்படுவதால், அதன் படி ஜோதிட கணக்கீடுகளை செய்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது)
Read Also | திருமண தடை நீங்க பரிகாரங்கள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR