காலையில் காபி, மதியம் ஜூஸ் என பட்டியல் போட்டு குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக ஆரோக்கியம் சார்ந்த ஒரு புதிய ஆய்வு வெளியாகியிருக்கிறது. அந்த ஆய்வில், பழச்சாறு, காபி அல்லது குளிர்பானங்கள் எல்லாம் குறிப்பிட்ட அளவுக்கு மேல், அதாவது அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரித்துள்ளது. அதேநேரத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் தினசரி தவறாமல் குடித்துக் கொண்டு வந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு குறைவு என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது. பிளாக் டீ, கிரீன் டீ அதிகபட்சம் 3 கப் குடிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபி குடித்தால் பக்கவாதம் வரும்


இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஸ்ட்ரோக்கில் இன்டர்ஸ்ட்ரோக் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட இரண்டு பகுப்பாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தான் இந்த எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக பழச்சாறு, காபி, குளிர்பானங்கள், மற்றும் டீ குடிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஆராயப்பட்டது. அதில் ஒரு நாளைக்கு நான்கு கப் காபிக்கு மேல் குடிப்பது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், அதே அளவு டீ குடிப்பது இந்த ஆபத்தை குறைக்கும்.


மேலும் படிக்க | குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!


ஒரு ஆய்வில், ஒரு நாளைக்கு ஒரு கார்பனேற்றப்பட்ட பானத்தை குடிப்பது, அதாவது செயற்கையாக இனிப்பால் தயாரிக்கப்பட்ட பானத்தை குடிக்கும்போது 22% பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த பானங்களை உட்கொள்ளும்போது பக்கவாதம் தொடர்பான ஆபத்து மூன்று மடங்காக அதிகரித்தது.


ஜூஸ் குடித்தால் என்ன ஆகும்?


இயற்கையாக போடப்படும் ஜூஸ்களில் பிரச்சனை இல்லை. அதுவே, அதில் சுவைக்காக செயற்கை இனிப்புகள், சர்க்கரைகள் சேர்க்கப்படும்போது தான் பிரச்சனையே. அத்தகைய ஜூஸ்களை குடிக்கும்போது பக்கவாதம் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. புதிதாகப் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் நன்மைகளைத் தரக்கூடியவை. பழச்சாறுகள் முன்கூட்டியே தயாரித்து அதற்கு இனிப்புகள் சேர்த்து அவை கெடாமல் இருக்க சேர்க்கப்படும் ப்ர்சர்வேடிவ்களால் தான் இத்தகைய ஆபத்து என்கிறது ஆய்வு. 


டீ குடித்தால் பக்கவாதம் வராதா?


கால்வே பல்கலைக்கழகத்தின் மருத்துவ தொற்றுநோயியல் பேராசிரியரும், கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆலோசகருமான ஆண்ட்ரூ ஸ்மித் இது குறித்து பேசும்போது, ஒரு நாளைக்கு நான்கு கப் காபிக்கு மேல் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை 37% அதிகரித்தது, ஆனால் குறைவான உட்கொள்ளல் பக்கவாதம் ஆபத்தை அதிகரிக்காது என்றார். ஒரு நாளைக்கு 7 கப் தண்ணீருக்கு மேல் குடிப்பது, இரத்த உறைவு காரணமாக பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. காலை உணவு மற்றும் 3-4 கப் பிளாக் டீயை குடிப்பதால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 18-20% குறைகிறது. ஒரு நாளைக்கு 3-4 கப் க்ரீன் டீ குடிப்பதால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 27% குறைவதாகவும் ஆண்ட்ரூ ஸ்மித் தெரிவித்துள்ளார்.


கவனத்தில் கொள்ள வேண்டியவை


இந்த ஆய்வுகள் குறிப்பிட்ட நோக்கத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டவை. அதனால், உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்ப உங்களின் உணவு முறைகளை அமைத்துக் கொள்ளுங்கள். பொதுவான தகவலின் அடிப்படையில் எந்தவொரு முன்முடிவுக்கும் வர வேண்டாம். ஒவ்வொருவருக்கும் உடல் வேறுபட்டவை. அதனால், அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப உணவு முறை அமைத்துக் கொள்வது சிறப்பு. காபி குடிக்கலாமா வேண்டாமா? என்று கேட்டால் உங்களின் ஆரோக்கியத்தை பொறுத்து நீங்கள் முடிவெடுக்கவும். அதேநேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மோசமான பின்விளைவுகளை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | குறட்டை சத்தம் ஓவரா இருக்கா? கட்டுப்படுத்த சூப்பரான பயிற்சிகள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ