வீட்டில் நம்முடன் இருப்பவர்களில் யாருக்காவது, அல்லது நமக்கே கூட குறட்டையை மிகவும் சத்தமாக விடும் பிரச்சனை இருக்கும். இதில் பிரச்சனை என்னவென்றால், குறட்டை விடும் நபருக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவருடன் தூங்குபவர்களுக்குதான் நிம்மதியாக உறங்க முடியாததன் சிரமம் தெரியும். இது, அவர்களுடைய தப்பு இல்லை என்றாலும் இதனால் பிறருக்குதான் அளவுக்கு அதிகமான பிரச்சனை ஏற்படும். இப்படிப்பட்ட இந்த குறட்டையை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் தெரியுமா?
பயிற்சிகள்:
குறட்டை பிரச்சனை, நமது நாக்கு உறங்கும் போது தொண்டை பகுதியில் சிக்கிக்கொள்வதால் வருவதாக கூறப்படுகிறது. இதனால், இதற்கான பயிற்சிகளை செய்யலாம்.
நாக்கு புஷ் அப்:
- நாக்கை வாயின் மேல் தளத்தில் அழுத்தி 5 விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இப்படியே 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
- நாக்கை முழுவதுமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியே நீட்டி, 5 முதல் 10 விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இது போல தினமும் 10 முறை செய்யலாம்.
தொண்டைக்கான பயிற்சிகள்:
- வாயை திறந்து நன்றாக பேசுவது அல்லது சத்தமாக பாடல் பாடுவது தொண்டை சதையை வலுவாக்க உதவும்.
- வாயை பெரிதாக திறந்து 5 விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதே போல 10 முறை செய்ய வேண்டும்.
தாடை பயிற்சி:
- வாயை பெரிதாக திறந்து உங்கள் கீழ் தாடையை இரு பக்கமும் அசைக்க வேண்டும். இதை, ஒரு நிமிடத்திற்கு செய்ய வேண்டும்.
- சிவிங் கம் போட்டு சில நிமிடங்கள் மெல்வது தாடைக்கு நல்லது.
கழுத்துக்கான பயிற்சிகள்:
- உங்கள் தலையை, 1-2 நிமிடங்களுக்கு கடிகார வாரியாக மற்றும் ரிவர்ஸில் சுழற்ற வேண்டும்.
- உங்கள் படுக்கையில் உடல் முழுவதும் பெட்டில் இருப்பது போலவும் தலை மட்டும் வெளியில் இருக்குமாறும் படுக்கவும். உங்கள் மார்பு அளவிற்கு தலையை உயர்த்தி 5 வினாடிகள் அப்படியே நிற்க வேண்டும். இப்படியே 10 முதல் 15 முறை செய்யலாம்.
தூக்க நிலை:
பலர், நேராக பார்த்தபடி நிமிர்ந்து படுப்பதால் குறட்டை பிரச்சனை வரும் என கூறப்படுகிறது. எனவே, வலது அல்லது இடது புறம் திரும்பி படுக்க முயற்சித்து பாருங்கள். இப்படி செய்வதால், உங்கள் மூச்சுக்குழாய் விரிவடைந்து, சுவாசம் சிரமம்/சத்தம் இல்லாமல் வெளியேறும் என கூறப்படுகிறது.
தலையணைகள்:
தலையை கொஞ்சம் உயர்த்தி படுக்க, இரண்டு தலையணைகளை பயன்படுத்துங்கள். இது, உங்கள் நாக்கு தொண்டையில் மூச்சு சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வதால் குறட்டை பிரச்சனை ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.
உடல் எடை:
கழுத்துப்பகுதியில் சிலருக்கு அதிகப்படியான சதை இருப்பதால் குறட்டை ஏற்படலாம். எனவே, அப்படி அதிகமாக இருக்கும் சதையை முதலில் நீக்க சில பயிற்சிகளை செய்ய வேண்டும்.
மதுப்பழக்கம்:
மது, போதை, சிகரெட் பழக்கம் இருப்பவர்களுக்கும் குறட்டை பிரச்சனை வரலாம். எனவே, அந்த பழக்கங்களை, எந்த அளவிற்கு குறைக்க முடிந்தாலும் உடலுக்கும் நல்லது, குறட்டையும் வராமல் இருக்கும்.
தூக்கம்:
தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுந்து கொள்ள உங்கள் உடலை பழக்கப்படுத்த வேண்டும். அது உங்கள் தூக்க நிலையை உயர்த்துவதோடு, உங்கள் சர்காடிய ரிதத்தை ஒழுங்காக செயல்பட செய்யும்.
நீர்ச்சத்து:
உடலில் நீர்ச்சத்து இல்லாத காரணத்தால் கூட குறட்டை பிரச்சனை வரலாம். தினமும் சரியாக தண்ணீர் குடித்து, நீர் காய் மற்றும் பழங்களை சாப்பிட்டால் இந்த பிரச்சனையை தீர்க்கலாம். கூடவே, சரியான டயட் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | குழந்தைகள் முன் பெற்றோர் செய்யவே கூடாத விஷயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ