தினசரி கணிசமான நேரத்தை  பேஸ்புக்கில் செலவிடுகிறீர்களா? அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களின் மகிழ்ச்சியில் அவை தாக்கத்தை புரிந்து கொள்ள இரண்டு வருடங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. அந்த முடிவுகள் அதிர்சியளிப்பதாகவும், Facebook பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதாகவும் இருக்கிறது.


நீங்கள் அடிக்கடி பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் பேஸ்புக் தரவுகளின் படி, ஒரு சராசரி பயனர் ஒவ்வொரு நாளும் தனது போர்ட்டலில் 50 நிமிடங்கள் செலவழிக்கிறார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹோலி பி ஷாக்யா (Holly B Shakya) மற்றும் யேல் பல்கலைக்கழகத்தின் (Yale University) நிக்கோலஸ் ஏ கிறிஸ்டாக்கிஸ் (Nicholas A Christakis) ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, 2013, 2014, 2015 என மூன்று பகுதியாக 5,208 கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டன.   


அமெரிக்க மக்கள்தொகையின் அடிப்படையில் இந்த கருத்துகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு ஆண்டுகளாக, பேஸ்புக்கில் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வாளர்கள் கண்காணித்தனர்.  


ஆய்வின் முடிவுகளின்படி, பேஸ்புக் ஒருவரின் இயல்பான வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல, ஒருவர் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிக்க்கிறார் என்றால், அவர்களுக்கு கவலை மற்றும் வருத்தம் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.  


Also Read | இந்தியாவில் echo devices புதிய பதிப்பை அறிமுகப்படுத்துகிறது Amazon... மலிவான விலையில்! 


ஒருவரின் நிலையைப் புதுப்பித்தல், இணைப்பைக் கிளிக் செய்தல், மற்றும் ‘liking’ போன்ற சராசரி சமூக ஊடக நடவடிக்கைகளால் மன ஆரோக்கியத்தில் 5-8 சதவீதம் குறைவு ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த சுய அறிக்கையின் அடிப்படையில் “நல்வாழ்வு” (well-being) கணக்கிடப்பட்டதாக தி ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ (Harvard Business Review) கூறுகிறது.


இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களின் பேஸ்புக் கணக்குகளிலிருந்து விருப்பங்கள், கிளிக்குகள், செலவழித்த சராசரி நேரம் மற்றும் நண்பர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளும் நேரடியாக பகுப்பாய்வு செய்யப்பட்டன.


பிறர், தங்கள் உள்ளடக்கத்தை தொடர்ந்து விரும்புவது மற்றும் இணைப்புகளைக் கிளிக் செய்வது ஆகியவை சுய-அறிக்கை மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் குறைப்பதாகவும், திருப்தியுடன் தொடர்புடையது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.


பேஸ்புக்கில் ஒருவர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பது, ஒருவரின் நிம்மதியான வாழ்க்கையைக் குறைப்பதில் ஒரு பெரிய பங்கு வகிப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


Also Read | Facebook: ஊழியர்கள் அரசியல் தொடர்பான புகைபடங்களை profile pictures பயன்படுத்தக்கூடாது  


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR