2005 ஆம் ஆண்டில் ரமா என்ற அந்த பெண்மணி டெல்லிக்கு இடம் பெயர்ந்து உச்சநீதிமன்றத்தில் பயிற்சி செய்யத் தொடங்கினார். முன்னதாக,ம் அவர் நோய் ஒன்றன் காரணமாக  ஞாபகங்களை இழந்த அவர் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களுக்கு உண்மையில் நன்றி கூற வேண்டும், தனது குடும்பத்திலிருந்து பிரிந்த ஒரு பெண், 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் தனது மகனுடன் மீண்டும் இணைந்தார். இந்த உணர்ச்சிகரமான கதை 2005 ஆம் ஆண்டு  தொடங்குகிறது, ரமா தேவி என்ற வழக்கறிஞர் தனது கணவருடன் சண்டையிட்டு கொல்கத்தாவில் (Kolkata) உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவரது மகன் மித்ராஜீத் சவுத்ரிக்கு அப்போது ஏழு வயதுதான். 


தனது வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, ரமா தில்லிக்கு இடம் பெயர்ந்து உச்சநீதிமன்றத்தில் (Supreme court) பயிற்சி செய்யத் தொடங்கினார், ஆனால் மன நோய்  தீவிரமானதால்,வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மறந்து அவருக்கு அனைத்தும் மறந்து போனது. அவர் டெல்லியின் மனித நடத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் தொடர்பான அமைப்பில் 9 மாதங்கள் கழித்தார், பின்னர் ரஹாப் சென்டர் ஃபார் ஹோப் என்னும் புனர்வாழ்வு மையத்திற்குச் சென்றார் (RAHAB Centre for HOPE rehabilitation facility) அங்கு ஒரு நாள் தனது மகனின் பெயர் அவருக்கு நினைவுக்கு வந்தது.


ALSO READ | தண்ணீரில் கண்டம் என கணித்த டாக்டர்கள்.... தவிக்கும் இளம் பெண்..!!!


ரமாவை தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கும் முயற்சியில், அந்த மையம் முகநூலில், மித்ராஜீத் சவுத்ரி என்ற பெயருள்ள அனைவரையும் தொடர்பு கொள்ளத் தொடங்கியது. அவர்கள் மித்ராஜீத் சவுத்ரி என்ற 6-7 பேரை தொடர்பு கொண்டனர், இருப்பினும் ஒரு மனிதர் மட்டுமே பதிலளித்தார். ராமா ​​தேவி தனது பேஸ்புக் (Facebook) படங்களிலிருந்து தனது மகனை அடையாளம் காண முடியவில்லை என்றாலும், வீடியோ அழைப்பில் அவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார். ஒரு உணர்ச்சி ரீதியான இணைப்பிற்கு பிறகு, இப்போது அவள் தன் குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல முடிவு செய்துள்ளாள்.


இது குறித்து கருத்து தெரிவித்த அவரது மகன் "நான் ஒரு நாள் என் தாயைக் கண்டுபிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதற்காக நான் முயற்சித்தேன், ஆனால் அதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் இப்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; நாங்கள் விருந்து வைப்போம். தற்போது அனைத்து இளைஞர்களும் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். நானும் அவர்களில் ஒருவன் ”என்று ரமாவின் மகன் மிகவும் உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தார்.


ALSO READ | கர்ப்பமானதையே அறியாமல் இருந்த இளம் பெண்.. திடீரென கழிப்பறையில் பிரசவம்..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR