Currency Note Latest News: நாடு முழுவதும் நோட்டு விநியோகத்திற்குப் பிறகு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பல வகையான செய்திகள் வெளியாகி வருகின்றன. நீங்கள் பண மதிப்பிழப்பு நேரத்தில், 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் இருந்திருந்தால், இப்போது உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு என ரிசர்வ் வங்கியில் இருந்து பெரும் தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் உங்கள் வீட்டில் பழைய நோட்டுகள் உள்ளதா? ஆம் எனில், அரசு இதுகுறித்து என்ன கூறியுள்ளது என்று இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கியின் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கடிதத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து குறிப்பிட்டுள்ளது. இந்திய பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதியை வெளிநாட்டினருக்கு ரிசர்வ் வங்கி மேலும் நீட்டித்துள்ளதாக வைரலான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? இலவசமாக மாற்றி கொள்ளலாம்!


உண்மை என்ன?


இந்தப் பதிவை ஆய்வு செய்தபோது,  பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB Fact Check) உண்மைச் சரிபார்ப்புக் குழு இந்த விஷயத்தை விசாரித்து அதன் உண்மையை வெளிக்கொண்டு வந்தது. இந்த வைரலான பதிவை சரிபார்த்துள்ளது. 500-1000 பழைய நோட்டுகளை வெளிநாட்டு குடிமக்களுக்கு மாற்றும் வசதியை நீட்டித்ததாக கூறியது போலியானது என அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த கடிதம் குறித்து ட்வீட் செய்த PIB,"வெளிநாட்டினர் செல்லாத இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி 2017இல் முடிவடைந்து விட்டது. 500 மற்றும் 1000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல்கள் வெளியானால் அதனை அப்படியே நம்பாமல் ஆய்வுக்குட்படுத்தவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பணமதிப்பிழப்பு


நவம்பர் 8, 2016 அன்று, பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் பணமதிப்பு நடவடிக்கை அறிவித்தார். இதன் பின்னர், அன்றைய தினம் நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இருப்பினும், இதன் பின்னர் மக்கள் வங்கியில் இருந்து தங்கள் நோட்டுகளை மாற்ற அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் படிக்க | ரூ.500 நோட்டுக்கள் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ