தற்போது வைரலாகும் ஒரு புதிய வீடியோவில், 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி நோட்டு என்ற தகவல் பரவி வருகிறது. வழக்கமாக, ‘உண்மையான’ நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் தான் பச்சை நிற ஸ்ட்ரிப் இருக்கும் என்று வீடியோவில் கூறப்பாட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வதந்திகளுக்கு மத்தியில், PIB தனது தகவல் சர்பார்ப்பு கணக்கான PIB Fact Check என்னும் கணக்கில், இந்த தகவல் வெறும் வதந்தி என்றும் இரண்டு வகை நோட்டுக்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என ட்வீட் செய்தது. மேலும் வைரல் ஆகி வரும் அந்த வீடியோ போலியானது என்றும் அந்த ட்வீட்டில், தெரிவிக்கப்பட்டுள்ளது.


உண்மையான 500 நோட்டை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள கவனிக்க வேண்டிய விஷயங்கள்: 


1.  ரூபாய் நோட்டை விளக்கின் முன் வைத்தால், இந்த இடத்தில் 500 என்று எழுதப்பட்டிருக்கும்.


2. ரூபாய் நோட்டை 45 டிகிரி கோணத்தில் கண் முன் தூக்கி பார்த்தால், இந்த இடத்தில் 500 என்று எழுதப்பட்டிருக்கும்.


3. இந்த இடத்தில் தேவநாகரியில் 500 எழுதப்பட்டிருக்கும்.


4. மகாத்மா காந்தியின் படம் நடுவில் வலதுபுறம் இருக்கும்.



5. பாரத் மற்றும் இந்தியா என்னும் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும்.


6. நோட்டை லேசாக வளைத்து பார்த்தால், பாதுகாப்பு ஸ்ட்ரிப்பின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து இண்டிகோவாக மாறும்.


7. பழைய நோட்டுடன் ஒப்பிடுகையில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து, ரிசர்வ் வங்கியின் லோகோ ஆகியவை வலது பக்கமாக மாறியுள்ளது.


8.  இங்கு மகாத்மா காந்தியின் படம் இருக்கும் என்பதோடு, எலக்ட்ரோடைப் வாட்டர்மார்க் கூட தெரியும்.


9. மேல் இடது பக்கம் மற்றும் கீழே உள்ள வலது பக்க எண்கள் இடமிருந்து வலமாக பெரிதாக ஆகிக் கொண்டே போகும்.


10. இங்கு எழுதப்பட்ட 500 என்ற எண்ணின் நிறம் மாறுவதைக் காணலாது. அதன் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறும்.


11. வலது பக்கம் அசோக தூண் இருக்கும்.


12. வலது பக்க வட்டப் பெட்டியில் 500 என்று எழுதப்பட்டுள்ளது, வலது மற்றும் இடது பக்கத்தில் 5 பிளீட் கோடுகள் மற்றும் அசோக தூணின் சின்னம், மகாத்மா காந்தியின் படம் ரஃபிளி அச்சில் உள்ளது.


13. நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.


14. ஸ்வச் பாரத் லோகோ வாசகத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.


15. மையத்தை நோக்கி  லேங்குவேஜ் பேனல் இருக்கும்.


16. இந்தியக் கொடியுடன் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டிருக்கும்.


இதனை மனதில் வைத்துக் கொண்டால் போலி நோட்டுக்களை அடையாளம் காண முடியும். 


மேலும் படிக்க | Amit Shah on Hijab: நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமித் ஷா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR