நியூடெல்லி: ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்த பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகையின் மொத்த மதிப்பு ரூ. 21,539.5 கோடிக்கும் அதிகமாக உள்ளது. எல்.ஐ.சி-யில் கோரப்படாத தொகையில் பெரும்பான்மையான பகுதி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகைகளைப் பெறுவதற்கான வசதியை எல்.ஐ.சி தனது இணையதளத்தில் வைத்துள்ளது.  உங்கள் எல்ஐசி பாலிசியில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், நீங்கள் அதை திருப்பி ஒப்படைத்துவிடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதாவது எல்ஐசியின் ஆயுள் காப்பீட்டு பாலிசி இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான காப்பீட்டு நிறுவனமாகும். ஆரம்பம் முதல் இப்போது வரை பல வகையான எல்.ஐ.சி பாலிசிகள், மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பல சமயங்களில் எல்ஐசியின் பலன்கள், வசதிகள் பற்றி சரியாகத் தெரியாமலேயே அதை வாங்கிவிட்டு பின்னர் வருந்துகிறார்கள். பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் சிரமப்படுகின்றனர்.


எல்ஐசி வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்துகிறது, அது எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
இருப்பினும், பாலிசியை முதிர்ச்சியடைவதற்கு முன் சரண்டர் செய்வதற்கான விதிமுறையும் உள்ளது. உங்கள் பாலிசியில் திருப்தி இல்லை என்றால், முதிர்வடையும் முன்னரே அதை ஒப்படைக்கலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எல்ஐசி பாலிசி சரண்டர் செய்யப்பட்டுவிட்டால், நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான காப்பீட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடுவதால், ஆயுள் காப்பீடும் முடிவுக்கு வந்துவிடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.


மேலும் படிக்க | 25 வயதிலேயே கோடீஸ்வரராகனுமா? அப்போ LIC ஓட இந்த திட்டம் போதும்


எல்.ஐ.சி பாலிசியை எவ்வாறு சரண்டர் செய்வது?
முதிர்வுக்கு முன் சரண்டர் செய்யும் பாலிசியால், பாலிசி தொகையின் மதிப்பு குறைந்துவிடும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடர்ந்து பிரீமியம் செலுத்திய பின்னரே பாலிசியை சரண்டர் செய்ய முடியும். மூன்று ஆண்டுகளுக்கு முன் சரண்டர் செய்தால், எந்தத் தொகையும் திரும்பச் செலுத்தப்படமாட்டாது. 


மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்யப்படும் பாலிசிகளுக்கு, தற்செயலான பலன்களுக்காக செலுத்தப்பட்ட பிரீமியத்தைத் தவிர்த்து, செலுத்தப்பட்ட பிரீமியம் தொகையில் 30 சதவீத பணத்தை திரும்பப் பெறுவார்கள். பாலிசியை தாமதமாக சரண்டர் செய்தால், அதிக பணம் கிடைக்கும். இதைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற எல்ஐசியின் இணையதளத்தைப் பார்வையிடலாம்.


மேலும் படிக்க | கனடாவில் தொடரும் என்.ஆர்.ஐ கொலைகள்! 24 வயது சீக்கிய இளைஞர் துப்பாக்கிச்சூட்டில் பலி


பாலிசியின் தற்போதையை நிலையை சரிபார்ப்பது எவ்வாறு?
பாலிசியின் நிலையை அறிய, லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அதாவது எல்ஐசியின் வலைதளத்தை பார்க்க வேண்டும்.
https://www.licindia.in/ என்ற இணையதளத்திற்கு செல்லலாம்.
இங்கே நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய https://ebiz.licindia.in/D2CPM/#Register என்ற இணையதளத்தில் உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.
இங்கே உங்கள் பெயர், பாலிசி எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
பதிவு முடிந்ததும், உங்கள் எல்ஐசி கணக்கைத் திறப்பதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் நிலையைச் சரிபார்க்கலாம்.
மேலும் தகவலுக்கு, குறிப்பிட்ட தகவலை நேரடியாக தொலைபேசியில் பெறலாம். இதற்கு 022 6827 6827 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த எண்ணை LICHELP என்று எழுதி 9222492224 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். இதற்கு எந்த செலவும் இல்லை.
பாலிசிதாரர் தன்னுடைய பெயர், பிறந்த தேதி, பாலிசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு தங்களுடைய கோரப்படாத பாலிசி தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். அதற்கான லிங்க் https://licindia.in/Bottom-Links/Unclaimed-Policy-Dues


மேலும் படிக்க | PAN Card Uses: பான் கார்டு எதற்கெல்லாம் தேவை? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ