PAN Card Uses: பான் கார்டு எதற்கெல்லாம் தேவை? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

PAN Card Apply: பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. மறுபுறம், மக்களிடம் பான் கார்டு இல்லையென்றால், அவர்களின் சில முக்கியமான வேலைகளும் சிக்கிக்கொள்ளக்கூடும். எனவே எந்தெந்த வேலைகளுக்கு பான் கார்டு தேவை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 12, 2022, 04:48 PM IST
  • பான் கார்டு பயன்கள்.
  • பான் கார்டு எதற்கெல்லாம் தேவை.
  • பான் கார்டு இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியுமா.
PAN Card Uses: பான் கார்டு எதற்கெல்லாம் தேவை? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் title=

இந்தியாவில் பான் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக இந்த பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. மறுபுறம், வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித் துறைக்கு தெரிவிக்க பான் கார்டு உதவுகிறது. அதேபோல் ஓருவரின் முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் ஆகியவற்றையும் வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் பயன்படுகிறது. எனவே எந்தெந்த வேலைகளுக்கு பான் கார்டு தேவை என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். 

அடையாள ஆவணம்
பான் கார்டை நாம் அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தலாம். ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை தவிர, ஒருவர் அடையாளச் சான்றாக பான் கார்டைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | கார் கடன் வாங்க வேண்டுமா? இந்த ‘4’ விஷயத்தை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!

முதலீட்டு நோக்கத்திற்காக
அதேபோல் நீங்கள் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்பினால், ரூ.50,000க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு உங்கள் பான் விவரங்களை வழங்க வேண்டும். பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் மற்றும் ஈக்விட்டி ஆகியவற்றிற்கும் பான் கார்டு தகவல் கட்டாயம்.

வருமான வரி ரிட்டன் மீதான கோரிக்கை
செலுத்த வேண்டிய உண்மையான வரியை விட டிடிஎஸ் கழிக்கப்படும் நேரங்கள் உள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பான் கார்டை வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்குடன் இணைப்பதன் மூலம் கூடுதல் தொகையைப் பெறலாம்.

லோன் பெற
லோன் விண்ணப்பத்தின் போது, ​​உங்கள் பான் கார்டு உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனாகவோ, தனிநபர் கடனாகவோ அல்லது வேறு ஏதேனும் கடனாகவோ இருந்தாலும் சரி பான் கார்டு கட்டாயம்.

வருமான வரி கணக்கு தாக்கல்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தகுதியுடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.

புதிதாக வங்கிக் கணக்கைத் திறக்க
புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது.

ரியல் எஸ்டேட்டுக்காக
ஒரு சொத்தை வாங்கும்போது, ​​வாடகைக்கு எடுக்கும்போது அல்லது விற்கும்போது ஆதாரமாக பான் கார்டு தேவைப்படுகிறது.

அந்நிய செலாவணி
உங்கள் இந்திய நாணயத்தை வெளிநாட்டு நாணயத்திற்கு மாற்ற விரும்பினால், உங்கள் பான் கார்டு விவரங்களை பண பரிமாற்ற நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

FD கணக்கிற்கு
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எஃப்டியில் முதலீடு செய்ய வேண்டுமானால், பான் கார்டு கட்டாயமாகும்.

தொலைபேசி கனெக்ஷன் பெற
நீங்கள் புதிய தொலைபேசி அல்லது மொபைல் இணைப்பைப் பெற விரும்பினால், உங்கள் பான் எண்ணை செல்லுலார் ஆபரேட்டர்களிடம் வழங்க வேண்டும்.

நகை வாங்குவதற்கு
5 லட்சத்துக்கு மேல் நகை வாங்க பான் கார்டு விவரங்களைச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | கிரெடிட் கார்ட், UPI பேமெண்ட் செய்பவர்களுக்கு குட் நியூஸ்: அதிகரித்தது வசதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News