ஏழரை நாட்டு சனி சேர்க்கை, சீரழிய போகும் 4 ராசிக்காரர்கள்
நீதியின் கடவுளான சனி பகவான், ஜனவரி 22 முதல் மறைந்து இருப்பார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனியின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் சில சுப அசுப பலனைத் தரும்.
புதுடெல்லி: சனியின் ராசி பலன் மாறப்போகிறது. ஏப்ரல் 29-ம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார். சனி பகவான் இரண்டரை வருடங்கள் கும்ப ராசியில் இருப்பார். ஆனால் இதற்கு முன் சனி பகவான் 33 நாட்கள் மறைந்து இருப்பார். அதன்படி சனி பகவான் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி மறைந்து இருப்பார். அதன் பிறகு பிப்ரவரி 22ஆம் தேதி சனியின் உதயம் நிகழும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனியின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் சில சுப அசுப பலனைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) வேதனையைத் தரும். வேலையில் தொடர் தோல்வியால் மனம் உளைச்சல் ஏற்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதீத பணச் செலவு காரணமாக வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். இது தவிர உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். மேலும், வியாபாரத்தில் நிதி இழப்பும் ஏற்படலாம்.
ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க
கடகம்: சனி மறைவால், இந்த ராசிக்காரர்கள் சிரமங்களைச் சூழ்ந்து கொள்ளலாம். உத்தியோகத்தில் மன உளைச்சலை சந்திக்க வேண்டி வரும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம். பண இழப்பும் ஏற்படலாம். வேலையில் அலட்சியம் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
கன்னி: சனியின் அஸ்தமனத்தால், 33 நாட்களுக்கு வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் காணப்படும். வேலையில் மனம் நிலையாக இருக்காது. இதனால் வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்காததால் மனம் உளைச்சல் ஏறப்படலாம். அதுமட்டுமின்றி உத்தியோகத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.
துலாம்: சனி அஸ்தமனத்தின் மோசமான பலன் இந்த ராசிக்காரர்களுக்குத்தான் இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம். நீங்கள் ஒரு சட்ட தகராறில் சிக்கலாம். இதனால் மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR