இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி இன்று முதல் மாறும்
வசந்த பஞ்சமியை முன்னிட்டு, மகர ராசியில் புதன் திசை மாறியுள்ளது. ஜோதிடத்தில், புதனுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
புதுடெல்லி: வசந்த பஞ்சமியை முன்னிட்டு, மகர ராசியில் புத்திக்கு காரணியான புதன் திசை மாறியுள்ளார். ஜோதிடத்தில், புதனுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் புதன் புத்தி, தகவல் தொடர்பு, தர்க்கம், சாமர்த்தியம், கணிதம் மற்றும் நட்பு ஆகியவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது. இந்த புதன் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது. அப்படிப்பட்ட நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் பலன் சிறப்பாக இருக்கும் என்பதை அறிவோம்.
மேஷம்: புதனின் பாதை மேஷ ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) வரப்பிரசாதமாக அமையும். இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எல்லாவிதமான வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். புதன் பெயர்ச்சி காலத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
ALSO READ | புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம்: 4 ராசிக்காரர்கள் மீது நேரடி தாக்கம்
ரிஷபம்: இந்த நேரம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நம்பிக்கையில் சாதகமான அதிகரிப்பு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும். பணியிடத்தில் செய்யும் பணி பாராட்டப்படும். புதன் பெயர்ச்சியின் போது பணம் வரவு உண்டாகும். மனைவியுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள்.
தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு புதன் பாதை சாதகமாக இருக்கும். இந்த நேரம் வேலை மற்றும் வியாபாரத்திற்கும் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
மகரம்: மகர ராசிக்கு புதனின் பாதை ஒரு வரப்பிரசாதமாக அமையும். வியாபாரத்தில் பெரும் லாபம் உண்டாகும். உங்கள் தொழிலில் புதிய உயரங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் சம்பளம் கூடும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான பொருளாதார பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
ALSO READ | Numerology: புதனின் பரிவர்த்தனையால் பணமழையில் நனையப் போவது நீங்களா?
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR