ஆண்டின் முதல் சூரிய கிரகணம், இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஜாக்பாட்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழவுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழப்போகிறது.
ஜோதிடத்தின் பார்வையில் ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உண்மையில், இந்த மாதம் 9 கிரகங்களின் ராசியும் மாறும். இதில் வியாழன், சனி, ராகு-கேது ஆகிய கிரகங்களும் அடங்கும். மேலும், இந்த மாதத்தின் கடைசி தேதி அதாவது ஏப்ரல் 30-ம் தேதி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமும் நிகழும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் ராசி மற்றும் கிரகண மாற்றம் மிகவும் முக்கியமான நிகழ்வு. ஏப்ரல் 30ஆம் தேதி சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழும். இந்த சூரிய கிரகணத்தால் 4 ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சாதகமாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சாதகமாக இருக்கும்
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் சுப பலன்கள் தெரியும். உத்யோகத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். பண வரவு உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்
கடகம்: சூரிய கிரகணத்தின் சுப பலன் கடக ராசிக்காரர்களையும் பாதிக்கும். சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் உத்தியோகத்தில் சாதகமான மாற்றங்கள் காணப்படும். சமூக கௌரவம் அதிகரிக்கும். தொழில் திட்டங்கள் வெற்றி பெறும். பயணங்களால் பணம் கிடைக்கும்.
துலாம்: இந்த சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். கிரகணத்தின் தாக்கத்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். இது தவிர வியாபாரத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சாதகமாக அமையும். லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகம். அரசுப் பணிகளில் வெற்றி உண்டாகும். இதனுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற முடியும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
சூரிய கிரகணம் தேதி மற்றும் நேரம்
பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 30 ஏப்ரல் 2022 அன்று நிகழும். சூரிய கிரகணம் இரவு 12:15 மணிக்கு தொடங்கும். இது மே 01 அன்று காலை 4:07 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழ உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR