Lord Shiva: சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட பிரசாதத்தை சாப்பிட வேண்டாம். பிரசாதம் தானே? ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் மூட நம்பிக்கை அல்ல. தெரிந்துக் கொள்ளுங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2021, 06:21 AM IST
  • சிவன் சொத்து குல நாசம்
  • சிவலிங்கத்திற்கான பிரசாதத்திற்கு யாருக்கூ உரிமை?
  • சிவனின் பிரசாதத்தை சாப்பிடலாமா?
Lord Shiva: சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும் title=

புதுடெல்லி: சிவபெருமானின் பிரசாதம் அனைத்து வகையான பாவங்களையும் போக்குவதாக சிவபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. சிவன் காணிக்கையை பார்த்த மாத்திரத்தில் பல பாவங்கள் அழிந்துவிடும் என்பது ஐதீகம்.

கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு பிரசாதம் வழங்கப்படுகிறது.  பக்தர்கள் அந்த பிரசாதத்தை கடவுளின் ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்கிறார்கள். சிவபுராணத்தில் (Shiva Puranam) பிரசாதம் அனைத்து வகையான பாவங்களையும் அழிக்கிறது என்று கூறப்படுகிறது. 

ஆனால் சிவபெருமானின் சிவலிங்கத்திற்கு வழங்கப்படும் பிரசாதம் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. பிரசாதம் தானே? ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் மூட நம்பிக்கை அல்ல. தெரிந்துக் கொள்ளுங்கள்.

புராண நம்பிக்கை
சிவன் சொத்து குலநாசம் என்று சொல்லப்படுவதைப் போலவே, சிவனுக்கு என்று படைக்கப்பட்ட பிரசாதத்தை உண்டால், தரித்திரமும், வறுமையும் வரும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், சிவபெருமானின் பிரசாதம் அனைத்து வகையான பாவங்களையும் போக்குவதாக சிவபுராணம் கூறுகிறது.

READ ALSO | பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள் ஏன் குபேரனுக்கு வட்டி மட்டும் கட்டுகிறார்?

சிவலிங்கத்தின் மீது செலுத்தப்படும் காணிக்கைகளையும், பிரசாதங்களையும் (Offerings to Lord Shiva) வாங்கக்கூடாது, சாப்பிடக்கூடாது என்பதன் பின்னணியில் ஒரு புராண நம்பிக்கை உள்ளது. சிவபெருமானின் வாயிலிருந்து சண்டேஷ்வர் என்ற சிவகணம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. 

அவர் பேய்கள் மற்றும் ஆவிகளின் தலைவர் ஆவார். சிவலிங்கத்தின் மீது சாற்றப்படும் பிரசாதத்தில், சண்டேஷ்வரருக்கும் ஒரு பங்கு உண்டு. இதனால்தான், சிவலிங்கத்திற்கு அர்ப்பணிக்கப்படும் பிரசாதத்தை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. 

சிவபுராணத்தில் கூறப்பட்டிருக்கும் பிரசாதத்தின் மகிமைக்கும், இந்தத் தகவலும் ஒன்றோடு ஒன்று மாறுபடுகிறதே என்று குழப்பமாய் இருக்கிறதா? விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள். 

கல், களிமண், பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு வழங்கப்படும் பிரசாதத்தை உண்ணக்கூடாது என்று நம்பப்படுகிறது. இந்த சிவலிங்கங்களுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை உண்ணக்கூடாது. அதை நீரில் விட்டு விடவேண்டும்.

ALSO READ | இந்த முஸ்லீம் நாட்டில் கடவுள் ராமருக்கு அதிக பக்தர்கள் இருக்கும் காரணம்!

இந்த சிவலிங்கங்களின் பிரசாதத்தை சாப்பிடலாம்  

பாதரசம் மற்றும் உலோகத்தில் (Mercury and Metal) செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு படைக்கப்படும் பிரசாதங்களை தாராளமாக சாப்பிடலாம். அதற்கு எந்தவொரு தோஷமோ தடையோ இல்லை. இந்த சிவலிங்கங்களுக்கு படைக்கப்படும் பிரசாதங்களில் சண்டேஷ்வரருக்கு பங்கு இல்லை.

இதைத் தவிர, சிவலிங்கத்துடன் கூடிய சாலிகிராமத்திற்கு படைக்கப்படும் பிரசாதங்களை சாப்பிடுவதால் தோஷங்கள் தீரும். சிவபெருமானின் பிரசாதம் அனைத்து வகையான பாவங்களையும் போக்குவதாக சிவபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானை பார்த்த மாத்திரத்தில் பல வகையான பாவங்கள் அழிந்துவிடும். எனவே, சிவனின் பிரசாதத்தை சாப்பிட்டால் தான் நலன் உண்டாகும் என்று நினைக்க வேண்டாம்.

அதேபோல, சிவலிங்கத்தின் மீது சாற்றப்படாத பிரசாதத்தையும், சிவனின் திருவுருவச் சிலைக்கு படைக்கப்படும் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டாலும் பாதிப்பு ஏற்படாது, சிவனின் அருள் கிடைக்கும்.

ALSO READ | பெருமாளின் தரிசன உலா

(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News