நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறும்
வியாழன் உதயமானது இந்த 5 ராசிக்காரர்களின் அதிஷ்டம் ஒளிரும். அத்துடன் இந்த ராசிக்காரர்கலின் தலைவிதி மாறப்போகிறது.
புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமாக கருதப்படும் குரு பகவான் இந்த நேரத்தில் அஸ்தமிக்கப் போகிறார். கிரகங்கள் அஸ்தமனம் அசுபமாக கருதப்படுகிறது. குரு பகவான் அறிவை ஆளும் கிரகமாக இருப்பதால், மனிதர்களின் ஞானம், புத்திசாலித்தனம், அறிவு ஆகியவை அதிகரித்து, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க சூழல் உருவாகும். வியாழன் தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். 2022 பிப்ரவரி 24 முதல் மறைந்த குரு, தற்போது 26 மார்ச் 2022 முதல் கும்ப ராசியில் உதிக்கப் போகிறார். வியாழன் உதயமானது இந்த 5 ராசிக்காரர்களின் அதிஷ்டம் ஒளிரும். அத்துடன் இந்த ராசிக்காரர்கலின் தலைவிதி மாறப்போகிறது.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழனின் உதயம் நம்பிக்கையை அதிகரிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.
மேலும் படிக்க | Astro: புத ஆதித்ய யோகத்தினால் பிரகாசிக்க போகும் ‘5’ ராசிகள்..!!
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வியாழனின் உதயம் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். திடீரென்று எங்கிருந்தோ பணம் வரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கலாம்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் உதயத்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வர்த்தகர்கள் பெரிய ஆர்டர்கள் அல்லது லாபம் பெறலாம். வேலையில் வெற்றி உண்டாகும்.
துலாம்: மார்ச் 26 முதல் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மையான காலம் தொடங்கும். அனைத்திலும் வெற்றி பெறுவார். தொழில்-வியாபாரத்தில் வெற்றி, மரியாதை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு வியாழன் உதயமானது செல்வத்தைத் தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் பல வழிகளில் பணத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR