புதுடெல்லி அரசு மருத்துவமனையில் ஒரு வேலை உணவு ₹11-க்கு கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விஷயத்தை டெல்லியை சேரந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் ‘உதய் பவுன்டேசன்’ தற்போது சாத்தியமாக்கியுள்ளது. புது டெல்லி அரசு மருத்துவமனைகளான AIIMS மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு முன்பு உதய் தொண்டு நிறுவனம் தினமும் இலவசமாக உணவு அளித்து வருகிறது. 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களை பார்த்துக்கொள்ளும் உறவினர்கள் இத்தொண்டு நிறுவனத்தால் அளிக்கப்படும் உணவை இலவசமாக வாங்கி உண்டுச்செல்லலாம். கடந்த மூன்று ஆண்டுகளாக உதய் நிறுவனம் இந்த சேவையினை செய்து வருகிறது.



இந்நிலையில் தற்போது பிரபல ஆன்லைன் பணப்பறிமாற்று செயலியான Paytm உடன் உதய் நிறுவனம் இணைந்து சேவைகளை செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் Paytm வாடிக்கையாளர்கள் தங்களால் முடிந்த தொகையினை Paytm செயலியின் மூலம் இச்சேவைக்கு நிதியாக அளிக்கலாம். ஒரு வேளை உணவிற்கு ₹11 என்ற விதத்தில் பயனர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உணவுக்கு நிதி அளிக்கலாம்.


Paytm பயனர்களிடன் இருந்து திரட்டப்படும் நிதியை கொண்டு உதய் நிறுவனம் நோயாளிகளுக்கு உணவு அளித்து வருகிறது. காலை 6 மணி துவங்கி இரவு 10 மணி வரையில் இந்த உணவு அளிக்கும் சேவை தினமும் நடைபெறுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இந்த சேவை நடைப்பெற்று வந்த போதிலும் தற்போது உதய் தொண்டு நிறுவனத்திற்கு உதவும் வகையில் அவர்களுடன் Paytm கைகோர்த்துள்ளது.


உதய் தொண்டு நிறுவனத்தின் இந்த சேவையின் மூலம் மாதம் ஒன்றிற்கு 30-40,000 பேர் பயனடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.