நமது திருவிழாக்கள் கொண்டாட்டங்கள் அனைத்தும் பக்தியை மேம்படுத்துவதோடு, பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் மாதம், மற்ற எல்லா மாதத்தையும் விட கொண்டாட்டங்கள் நிறைந்த மாதம். வடக்கில் இமய மலையில் இருந்து தெற்கே குமரி வரை கொண்டாட்டங்களுக்கு குறைவே இருப்பதில்லை. ஆன்மீக விழாக்கள், இசைவிழாக்கள், நடனம் நாட்டியம் என இந்தியாவே களை கட்டும் மாதம் இது.


இந்த வருடம் கொரோனாவினால், சிறிது பாதிப்பு என்றாலும், உள்ளூர் நிலையில் கொண்டாட்டங்கள், கட்டுபாடுகளுடன், கொரோனா விதிமுறைகளுடன் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இசை கலைஞர்கள், நாடக கலைஞர்கள், நடன கலைஞர்கள் மட்டுமல்லாது பல விதமான கலைஞர்களுக்கு என அனைவருக்குமே கொண்டாட்டமான காலம் இது.


நமது பண்டிகைகள் கொண்டாட்டங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆன்மீகம் சார்ந்த பல தொழில்களின் மேம்பாடு ஒட்டு மொத்த பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கிறது.


இதில் நவராத்தியின் பங்கு மிக முக்கியமானது. 


வடக்கில் நவராத்திரியின் இறுதியில் கொண்டாடப்படும் ராம்லீலா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதில் விஜயதசமியன்று, இராவணன் எரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.


வாரணாசியில், அதாவது காசியில் இந்த விழா ராம் நகரின் ராம் லீலா என 31 நாட்கள் நடைபெறும். இதில் ராமாயணம் தோடர்பான கதைகள் நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.
 இது உலகின் மிக சிறந்த ராம்லீலாவாக பெயர் பெற்றது.


ALSO READ | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!


ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில், இமயம் முதல் குமரி வரை, இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு விதமாக தேவி வணங்கப்படுகிறாள்.


கொல்கத்தாவின் காளி பூஜை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. காளியின் பிரம்மாண்டமான சிலைகள் வைக்கப்பட்டு, காளியை விதம் விதமாக அலங்காரம் செய்து, மக்கள் பூஜித்து மகிழ்கின்றனர்.


இசை, நடனம், தாளம் என கொண்டாட்டங்களுக்கு குறைவே இல்லை. 


மைசூர் மற்றும் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் என அனைத்து இடங்களிலும் கொண்டாட்டங்கள் குறைவில்லாமல் இருக்கும்.  தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில், இதனை பந்துகம்மா என்ற பெயரில்  கொண்டாடுவார்கள். மைசூரில் மிகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டேஸ்வரியை பூஜித்து கொண்டாடுவார்கள்.


இது தவிர ராஜஸ்தானில் கபீர் யாத்ரா என்ற இசை விழா நடக்கும்.  இதில் பக்தி பாடல்கள் சுஃபி இசை விழாக்கள் நடைபெறும். அதோடு ஓவியர்கள் மற்றும் சிலை வடிப்பவர்களும் தங்களை கலை படைப்புகளை காட்சி படுத்துவார்கள்.


ALSO READ | பாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..!!!


கடைசியாக நமது தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், மக்கள் கொலு வைத்து, தேவியை பூஜிக்கிறார்கள். பெரிய அளவில் மண் பொம்மைகள் விற்பனை ஆகும் மாதம் இது தான். இதனால் பொம்மை கலைஞர்கள் வாழ்வாதாரம் மேம்படுகிறது. 


கோவில்களுக்கு சிறப்பு பூஜைகள் பிரார்தனைகள், இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்களுக்கு குறைவே இல்லாத மாதம் இந்த அக்டோபர் மாதம்.


ALSO READ | பாபர் மசூதி இடிப்பில் பாகிஸ்தான் சதி இருந்ததா.. தீர்ப்பின் முக்கிய அம்சம் கூறுவது என்ன ..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR