புத்தாண்டில், மத்திய அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. 2019-20 நிதியாண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) 8.5 சதவீத வட்டியை வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. வட்டி விகிதம் தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிக்க தொழிலாளர் மற்றும் நிதி அமைச்சகத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பர் மாதம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவிட் -19 (COVID-19)  காரணமாக வட்டி இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டும் அறிவித்தது. தீபாவளி வரை 8.15 சதவீத வட்டி கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என்று EPFO முடிவு செய்திருந்தது. மீதமுள்ள 0.35 சதவீதம் பங்குகள் விற்பனையிலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்து வழங்கப்படும் என கூறப்பட்டது. இப்போது வட்டியை முழுமையாக செலுத்த அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. EPFO ஒரு வாரத்திற்குள் பணத்தை வெளியிடும். இதற்குப் பிறகு அது உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.


இதில் ஏற்பட்ட நல்ல விஷயம் என்னவென்றால், பரிவர்த்தனை வர்த்தக நிதி (ETF) விற்பனையிலிருந்து EPFO -விற்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது. 8.50 சதவீத வட்டி விகிதத்தை செலுத்திய பிறகும், EPFO -விற்கு கூடுதலாக ₹1,000 கோடி மீதமிருக்கும் என கூறப்படுகிறது. செப்டம்பரில், இரண்டு தவணைகளில் வட்டி செலுத்த முடிவு செய்யப்பட்டபோது, ​​அந்த நேரத்தில் EPFO -விடம் ₹500 கோடி இருந்தது.


EPF-ல் உங்கள் கணக்கில் உள்ள இருப்பை சரிபார்க்கும் முறை


1. முதலில் Epfindia.gov.in என்ற வலைதளத்திற்கு சென்று லாக் இன் செய்ய வேண்டும்.


2. இதற்குப் பிறகு, உங்கள் UN எண், கடவுச்சொல் மற்றும் கேப்சா குறியீட்டை நிரப்பவும்.


3. திரையில், இ-பாஸ்புக்கின் என்னும் ஆப்ஷனை நீங்கள் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்ய வேண்டும்.


4. இப்போது உங்களிடம் சில தகவல்கள் கேட்கப்படும். அதை நிரப்பிய பிறகு, ஓகே என்ற பட்டனை கிளிக் செய்க.


5. உறுப்பினர் ஐடியைத் திறக்கவும்.


6. இதைச் செய்த பிறகு, உங்கள் PF கணக்கில் உள்ள  மொத்த ​​இருப்பைக் காணலாம்.


ALSO READ | WhatsApp விரைவில் கொண்டு வருகிறது Multi Device Support.. அதன் சிறப்பு அம்சம் என்ன..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR