First Private Train of India: கோவையில் இருந்து ஷீரடிக்கு பயணித்த முதல் தனியார் ரயில்
Private Train Service of India: கோவையில் இருந்து ஷீரடிக்கு முதல் தனியார் ரயில் சேவை இந்தியாவில் தொடங்கியது. 1500 பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்
கோவை: இந்தியாவின் முதல் தனியார் ரயில் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டது, பொதுத்துறை ரயிலுக்கும், தனியார் ரயிலுக்கும் என்ன வித்தியாசம்? எந்தெந்த வசதிகளுடன் தனியார் பயணத்தை அனுபவிக்கலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் முதல் தனியார் ரயில் தமிழகத்தில் இருந்து தொடங்கியது. கோயம்புத்தூரில் இருந்து கொடியசைத்து தனது முதல் பயணத்தைத் தொடங்கிய இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை ஷீரடிக்கு சென்றது.
பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் இந்த ரயிலில் 1,500 பேர் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். இந்திய ரயில்வே இந்த ரயிலை 2 ஆண்டு குத்தகைக்கு தனியார் சேவை நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த ரயில் மாதம் மூன்று முறை இயக்கப்படும்.
மேலும் படிக்க | IRCTCயின் ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலுக்கு அமோக வரவேற்பு
1500 பயணிகள் பயணிக்க முடியும்
இந்த ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (2022, ஜூன் 14) மாலை 6 மணிக்குப் புறப்பட்டு வியாழக்கிழமை காலை 7.25 மணிக்கு ஷீரடியில் உள்ள சாய் நகரை சென்றடைந்தது. இதில், 1,500 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பி குகநேசன் தெரிவித்தார்.
20 ரயில் பெட்டிகள்
இந்த ரயிலை சேவை வழங்குநருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டதாக பி குகனேசன் தெரிவித்தார். தனியார் சேவை வழங்குநர், இந்தியன் ரயில்வேயின் இருக்கைகளை புதுப்பித்துள்ளது.
இந்த ரயில் மாதத்திற்கு குறைந்தது மூன்று பயணங்களை மேற்கொள்ளும். இதில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் கோச்சுகள் என மொத்தம் 20 பெட்டிகள் உள்ளன.
இந்த நிலையங்களில் ரயில் நிற்கும்
திருப்பூர், ஈரோடு, சேலம் ஜோலார்பேட்டை, பெங்களூரு யெலஹங்கா, தர்மவரா, மந்திராலயம் சாலை மற்றும் வாடி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.
ஷீரடியை அடைந்த பிறகு, ரயில் ஒரு நாள் இடைவெளி எடுக்கும். இதன் பிறகு, வெள்ளிக்கிழமை சாய்நகரில் இருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கும் இந்த ரயில், சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு கோவை ரயில்நிலையத்தை சென்றடையும்.
விஐபி வசதி கிடைக்கும்
இந்த ரயிலின் டிக்கெட் கட்டணங்கள் இந்திய ரயில்வேயால் வசூலிக்கப்படும் வழக்கமான ரயிலு கட்டணத்திற்கு சமமானது என்பது ஆச்சரியமான ஒன்று. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு விஐபி தரிசனம் செய்யலாம்.
சைவ உணவு
ரயிலை ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் வழங்குநர்கள் பராமரிக்கிறார்கள், அவர்கள் பயணத்தின் போது தூய்மையை கவனித்துக் கொள்வார்கள். ரயிலில் பாரம்பரிய சைவ உணவுகள் வழங்கப்படும்.
ரயில்வே போலீஸ் படையினர், ஒரு ரயில் கேப்டன், ஒரு மருத்துவர் மற்றும் தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் ரயிலில் பயணிப்பார்கள்.
மேலும் படிக்க | IRCTC பயணிகளுக்கு எச்சரிக்கை, மறந்து கூட இந்த தவறை செய்யாதீங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe