SeePics: பிலிப்பெய்ன்ஸ் விமானத்தில் தோன்றிய திடீர் தேவதை...
விண்ணில் பறந்த விமானத்தில், பசிக்காக அழுந்த பச்சிளம் குழந்தையின் பசியை போக்க விமான பணிப்பெண், குழந்தையின் தாயாக உருமாறி பயணிகளின் கண்ணிற்கு தேவதையாக தெரிந்துள்ளார்!
விண்ணில் பறந்த விமானத்தில், பசிக்காக அழுந்த பச்சிளம் குழந்தையின் பசியை போக்க விமான பணிப்பெண், குழந்தையின் தாயாக உருமாறி பயணிகளின் கண்ணிற்கு தேவதையாக தெரிந்துள்ளார்!
கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் பிளிப்பெய்ன்ஸ் விமானத்தில் கைகுழந்தையுடன் விமானத்தில் பயணித்துள்ளார். பயணத்தில் பாதி வழியில் குழந்தை பசிக்காக அழத்தொடங்கியுள்ளது. அழும் குழந்தைக்கு பால் கொடுக்க இயலாத அந்த தாய் குழந்தையினை கோரமாய் பார்த்திருக்கு, அப்போது அங்கு வந்த விமான பணிப்பெண் Patrisha Organo குழந்தைக்கு தாயாய் மாறி தாய் பால் வழங்கியுள்ளார்.
பொது இடங்களில் குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது குற்றமாய் பார்க்கப்படும் காலத்தில், மற்றொரு தாயின் குழந்தைக்கு Patrisha Organo விமானத்தில் தாய்பால் கொடுத்தாள்ளார். இந்த விவகாரம் தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து Patrisha Organo தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... சம்பவத்தன்று வழக்கமான நிகழ்வுகளின்படியே விமானம் விண்ணை நோக்கி புறப்பட்டது. பயணத்தில் பாதி வழியில் அழும் குழ்ந்தை ஒன்றின் குரல் கேட்க, குழந்தையின் தாயிடன் விவரம் கேட்டேன். அப்போது அவர் தன்னால் குழந்தைக்கு பால் கொடுக்க இயலாது எனவும், தன் வசம் வைத்திருந்த பதப்படுத்தப்பட்ட பால் காலியாகி விட்டதாகவும் தெரிவத்தார். எதிர்பாரா விதமாக விமானத்திலும் குழந்தைக்கு கொடுக்க ஏதுவாக பதப்படுத்தப்பட்ட பால் இல்லை., எனவே எனது பாலினை குழந்தைக்கு வழங்குவதை தவிற வேறு வழியில்லை என முடிவு செய்து இக்காரியத்தில் ஈடுப்பட்டேன்.
இதற்கு ஆதரவாக தனது மேலாளர் Ms. Sheryl Villaflor துணை நின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் அந்த குழந்தைக்கு தாய்பால் வழங்கும்போது குழந்தையின் தாயின் கண்ணில் மன அமைதியினை கண்டதாகவும் இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.