ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரபலமான நிறுவனங்களுள் ஒன்றாக ஃப்ளிப்கார்ட் தளம் விளங்கி வருகிறது, தற்போது உள்நாட்டு இ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர், பொருட்களின் விலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து டெலிவரி ஆர்டர்களுக்கும் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளதால், இனிமேல் ஃப்ளிப்கார்ட் மூலம் பெறப்படும் டெலிவரிகளுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும், அதேசமயம் ப்ரீபெய்டு ஆர்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பார்ட்! முழு PF வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு!


இதுகுறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்புப்படி, ஒவ்வொரு விற்பனையாளருக்கும் டெலிவரி கட்டணம் மாறுபடும், ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் என பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகளுக்கு ஆர்டர் மதிப்பு ரூ.500க்கு குறைவாக இருந்தால் ஒரு பொருளுக்கு டெலிவரி செய்வதற்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும்.  அதேசமயம், ரூ.500 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் ஆர்டர்கள் செய்யப்பட்டால் அந்த பொருட்கள் இலவசமாக டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.  மேலும் டெலிவரி கட்டணங்கள் மறைக்கப்பட்ட கட்டணங்கள் அல்ல என்றும் விற்பனையாளரின் ஷிப்பிங் பாலிசியை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.



இதுவரை ஃப்ளிப்கார்ட் அதன் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களுக்கு கட்டணம் வசூலித்ததில்லை இனிமேல் சிஓடி பாலிசியின்படி, ரூ.150 அல்லது ரூ.15,000 மதிப்பில் ஒரு பொருளை ஆர்டர் செய்தாலும் டெலிவரி கட்டணத்துடன் சேர்த்து ஒரு ஆர்டருக்கு ரூ.5 செலுத்த வேண்டும் என்று ஃப்ளிப்கார்ட் கூறியுள்ளது. ஸ்மார்ட்போன் ஆர்டர்களுக்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே ரூ.29-ஐ பாதுகாப்பான பேக்கேஜிங் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியது.  2022 நிதியாண்டில் இ-சில்லறை விற்பனையாளரின் நிகர இழப்பு 51 சதவீதம் அதிகரித்து ரூ.4,362 கோடியாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபேக்டர் பற்றிய முக்கிய அப்டேட், விரைவில் நல்ல செய்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ