Today Weather Forecast Updates: நாடு முழுவதும் பருவமழை கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. அதேநேரத்தில் பல மாநிலங்களில் பருவமழை அழிவை ஏற்படுத்தி உள்ளது. வங்கக் கடலில் உருவான சூறாவளி சுழற்சி காரணமாக, சூறாவளி புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் சுமார் 7 மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், மும்பையில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லி உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று நாடு முழுவதும் வானிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிவப்பு எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை, தானே மற்றும் ராய்கர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என நேற்று (புதன்கிழமை) பிற்பகலில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), தொடர்ந்து மழை கொட்டியதால், மாலைக்குள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
5 மணி நேரத்தில் 200 மிமீ மழை
நேற்று பெய்த மழை காரணமாக மும்பை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய மழை இரவு 11 மணி வரை நீடித்தது. முதலில் லேசான மழை பெய்தது. பின்னர் சாரல் மழை பெய்யத் தொடங்கியது, மும்பை முழுவதும் மழை தண்ணீரால் நிரம்பியது. மும்பையில் 5 மணி நேரத்தில் 200 மிமீ மழை பெய்தது,
5 பேர் உயிரிழப்பு
நேற்று (புதன்கிழமை) மாலை முதல் இரவு வரை பெய்த மழைக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையின் காரணமாக ரயில்களை நிறுத்த வேண்டியிருந்தது மற்றும் பல ரயில்களின் வழித்தடங்கள் திருப்பி விடப்பட்டன. 14 விமானங்களின் வழித்தடங்கள் திருப்பி விடப்பட்டன.
மேலும் படிக்க - Chennai Rain | எங்கெல்லாம் பெய்யும்! சென்னையை புரட்டி போட்ட மழை! மக்கள் கடும் அவதி
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இன்று மும்பையில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கக்கூடும். பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யக்கூடும். சில இடங்களில் இடி, மின்னலுக்கான வாய்ப்பு உள்ளது. எனவே மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இன்று வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டெல்லியில் கனமழை
டெல்லியிலும் இன்று மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 20 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். மோசமான வானிலை காரணமாக வெப்பநிலை 34 டிகிரி வரை குறையும். நாளை மற்றும் நாளை மறுநாளும் ஈரப்பதத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். அதிகபட்ச வெப்பநிலை 33 ஆகவும் குறைந்தபட்சம் 25 டிகிரியாகவும் இருக்கலாம்.
டெல்லி காற்றின் தரம்
டெல்லியின் காற்றின் தரம் மோசமடையத் தொடங்கியுள்ளது. நேற்று (புதன்கிழமை) டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) மோசமான பிரிவான 235 எட்டியது.
கனமழை முதல் மிக கனமழை
கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், கிழக்கு உத்தரபிரதேசம், கொங்கன்-கோவா ஆகிய மாநிலங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
உத்தரகாண்ட், மேற்கு உத்தரபிரதேசம், மேற்கு மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெய்யும் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ