Flipkart Big Saving Days Sale: அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் Flipkart விற்பனை (Flipkart Sale) ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையில், நீங்கள் மின்னணு பொருட்களுக்கு பம்பர் தள்ளுபடியை பெற முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகையால், நீங்கள் கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட்போன் (Smartphone) ஆகியவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், இரண்டே நாட்களுக்கு காத்திருங்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த பொருட்களை நீங்கள் மிக மலிவான விலையில் பெற முடியும். Flipkart Plus உறுப்பினர்களுக்கு, இந்த சேல் ஜூன் 12 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்குகிறது. வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு இது ஜூன் 13 முதல் தொடங்கும். ஜூன் 13 ஆம் தெதி தொடங்கும் இந்த சேல், ஜூன் 16 வரை இருக்கும். இந்த சேலில், SBI-யில் கணக்கு வைத்திருப்பவர்கள் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தினால், கூடுதல் 10% உடனடி தள்ளுபடியைப் பெற முடியும். 


மின்னணு சாதனங்களில் பெரிய அளவிலான தள்ளுபடி


Flipkart-டின் இந்த சேலில், ஸ்மார்ட்போன்கள் உட்பட பல மின்னணு சாதனங்கள் மற்றும் அக்சசரிக்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். பிளிப்கார்ட்டின் இந்த சேலில், மோட்டோரோலா, கூகிள், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஆசஸ், ரியல்மீ, போக்கோ போன்ற பிராண்டுகளுக்கு அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.


ALSO READ: ஃபிளிப்கார்ட்டின் Big Saving Days Sale மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி


iPhone-னும் மலிவாக வாங்கலாம்


ஐபோனில் (iPhone) ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்கள் iPhone 11 Pro-வை ரூ .79,899 க்கு பதிலாக ரூ .74,999 க்கும், iPhone XR -ஐ ரூ .41,999 க்கு பதிலாக ரூ .39,999 க்கும், iPhone SE (2020)-ஐ ரூ .32,999 க்கு பதிலாக ரூ .31,999 க்கும் வாங்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசிகளைத் தவிர, Gionee Max Pro, Infinix Smart 5 மற்றும் Micromax In Note 1 ஆகிய தொலைபேசிகளிலும் Flipkart சேலில் தள்ளுபடி கிடைக்கும். 


இந்த கேஜெட்களிலும் தள்ளுபடி கிடைக்கும்


ஸ்மார்ட்போன்கள் தவிர, பிளிப்கார்ட்டின் இந்த சேலில் மின்னணு சாதனங்கள் மற்றும் அக்சசரிக்களில் (Mobile Accessories) 80% வரை தள்ளுபடி (80% discount on flipkart sale) கிடைக்கும். ஸ்மார்ட்வாட்ச்களில் (Smartwatch) 60 சதவீதம் வரை தள்ளுபடி, டேப்லெட்டுகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி, டெஸ்க்டாப் கணிணிகள் மற்றும் மடிக்கணினிகளில் 30 சதவீதம் தள்ளுபடி என அதிரடியான பல நன்மைகள் கிடைக்கின்றன. பிளிப்கார்ட் சேலின் போது காலை 12, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு கிரேஸி டீல்களும் (Crazy Deals) கிடைக்கும். இதில் சில குறிப்பிட்ட சலுகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும்.


ALSO READ: Flipkart Offer: மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாக அறிய வாய்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR