புது டெல்லி: இணையவழியாக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை கொண்டாடடும் விதமாக, இந்த ஆண்டும் பல தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துள்ளது. 2019 நிறைவடைய இன்னும் 13 நாடகள் தான் உள்ளது. இந்த நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இந்த மதம் (டிசம்பர்) 21 முதல் 23 வரை இந்த ஆண்டுக்கான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் ஈ-காமர்ஸ் நிறுவனம் பிளிப்கார்ட் பல சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல இந்த முறை என்னென்ன சலுகை? எந்த பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? போன்ற விவரங்களை பார்ப்போம்.


> ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறித்து ஒரு டீஸர் பிளிப்கார்ட் தனது வலைபக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது 2019 இன் சிறந்த சலுகை என்று நிறுவனம் கூறுகிறது. 


> ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கினால் 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி EMI பரிவர்த்தனைகளிலும் கிடைக்கும். 


சாம்சங் ஸ்மார்ட்போன்களில் அதிக தள்ளுபடிகள்:
> சாம்சங் எஸ் 9 (S9) இன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் பிளிப்கார்ட்டின் ஆண்டு இறுதி விற்பனையில் ரூ .27,999 க்கு கிடைக்கும். அதே நேரத்தில் அதன் விலை 62,500 ரூபாய் ஆகும்.
> சாம்சங் ஏ 30 எஸ் (A30S) 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,900.


> எஸ் 9 பிளஸின் (S9) 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.29,999.


> A50 ஸ்மார்ட்போன் விலை ரூ .14,999.


OPPO இன் ஸ்மார்ட்போன்களிலும் தள்ளுபடி: 
> ஒப்போ எஃப் 11 ப்ரோவின் 6 ஜிபி + 128 ஜிபி ரூ.16,990 க்கு கிடைக்கும். அதன் மார்க்கெட் விலை ரூ.29,990 ஆகும்.


> ரூ18,990 விலை கொண்ட ஒப்போ ஏ 7 இன் 4 ஜிபி + 64 ஜிபி ரூ.9,990 க்கு கிடைக்கும். 


> ஒப்போ எஃப் 11 இன் 4 ஜிபி + 128 ஜிபி ரூ..12,990 க்கு கிடைக்கும். இந்த மார்கெட் விலை ரூ.21,990 ஆகும்.


முதன்மை ஸ்மார்ட்போன்களில் பம்பர் தள்ளுபடி:
விற்பனையின் போது, ​​பிளிப்கார்ட் பல பிரபலமான முதன்மை ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. விற்பனையில், கூகிள் பிக்சல் 3 ஏ எக்ஸ்எல்லின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ .30,999 க்கும், ஐபோன் 7 இன் 32 ஜிபி வேரியண்ட்டும் ரூ.24,999 க்கும், சாம்சங் ஏ 70 எஸ் ஸ்மார்ட்போன் ரூ.28,999 க்கும், கூகிள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் ரூ.42,999 க்கும் கிடைக்கும். அவற்றின் விலை முறையே ரூ.44,999, ரூ.29,900, ரூ.28,999 மற்றும் ரூ.71 ஆயிரம். அதே நேரத்தில், விற்பனையின் போது, ​​ஐபோன் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ .64,900 ஆரம்ப விலையில் கிடைக்கும்.


ஹானர் ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகை:
இந்த பிளிப்கார்ட் விற்பனையின் போது, ரூ.13,999 விலை கொண்ட ​​ஹானர் 10 லைட் ரூ.7,999 கிடைக்கும். ரூ.16,999 விலை கொண்ட ஹானர் 20ஐ ரூ.10,9999 -க்கும் கிடைக்கும். 


நோக்கியா மற்றும் ஆசஸ் ஸ்மார்ட்போன்கள் மலிவாக கிடைக்கும்:
நோக்கியா மற்றும் ஆசஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்டு மற்றும் விற்பனையில் தள்ளுபடிகள் கிடைக்கும்.