த்ரிவாகோ, அமேசான், நெட் பிளிக்ஸ் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய BJP!
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம் பிடித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது!
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம் பிடித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது!
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 7ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் என்று அழைக்கப்படுகின்ற பார்க் (BARC) வெளியிட்டுள்ள தகவலின், உலகின் பெரும் பணக்கார நிறுவனங்களான அமேசான், நெட்ப்ளிக்ஸ், ட்ரிவேகோ போன்வற்றை பின்னுக்கு தள்ளி தொலைக்காட்சி விளம்பரங்களில் முதலிடத்தில் உள்ளது பாஜக.
5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த மாநிலங்களில், தொலைக்காட்சிகளை பாஜக விளம்பரங்களே ஆக்கிரமித்துள்ளது. கடந்த நவம்பர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான தேதிகளில் பாஜக தொடர்பாக விளம்பரங்கள் 22,000 முறை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பணக்கார நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை விட பாஜக விளம்பரம் இரு மடங்கும், அமேசான் நிறுவனத்தை விட மூன்று மடங்கும் அதிகமாக விளம்பரப்படுத்தியுள்ளது.
மேலும், வேறு எந்த கட்சியும் இப்படியான அதிகப்பட்ச தொகையை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு செலவிடவில்லை என்று கூறப்படுகிறது. ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டும் இந்தியாவின் முதல் பணக்கார கட்சியான பாஜக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே விளம்பரங்களுக்கு அதிகளவு செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கியது. பாஜக ஆட்சியில் அமர்ந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் விளம்பரங்களுக்காக 5,000 கோடி செலவிட்டுள்ளது. இந்த தொகை மன்மோகன் சிங் தனது ஆட்சிக்காலமான 10 ஆண்டுகள் முழுவதும் செலவிட்ட தொகைக்கு சமம் என தெரியவந்துள்ளது.
பாஜக-வை அடுத்து அடுத்த இடத்தில் நெட் பிளிக்ஸ் (Netflix) இணையதளம் மற்றும் ட்ரிவாகோ (Trivago) ஆகியவற்றின் விளம்பரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ள பார்க், முதல் 10 இடங்களில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் விளம்பரம் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.